தமிழக அரசின் இந்த செயல் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட மாநில அரசு. மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி என மாநில அரசுகள் கொரோனா ஒழிப்பில் அல்லாடிக் கொண்டிருக்கும் போது 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வாயிலான இந்த ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.மத்திய அரசு கொடுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போதுமானவைகளாக இல்லை. தடுப்பூசிகள் இல்லாமல் கொரோனா சங்கிலியை அறுத்தெறிவதும் கடினம் என்ற நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதலுக்கு இன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. அதில், 90 நாள்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது எஸ்.வி.சேகர் வீட்டிற்கு பால் பாக்கெட் சப்ளை பண்ணுவதையே தங்களின் அதிகாரம் என அதிமுகவினர் நம்பிக்கொண்டிருந்த நிலையில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டது தமிழக அரசு!
