Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாடகர் கோவனின் கைது இந்திய ஒட்டு ஜனநாயகத்தின் குறுக்குவெட்டு முகம்

kovanமன்னர் ஆட்சியும் நிலப்பிரபுத்துவமும் மேற்கு நாடுகளில் எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக யாரும் கேள்வி கேட முடியாமல் நிலைத்து நின்றது. அப்போதெல்லாம் மன்னர்களின் ஆட்சியையும் பேரரசுகளையும் தவிர வேறு ஆட்சியதிகாரம் தோன்றும் என யாருமே நினைத்துப் பார்த்திருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அமைப்பு சிதைவின்றி அத்தனை நீண்ட ஆண்டுகள் நிலைத்திருந்த போதும் முதலாளித்துவ அமைப்பு அதன் கருவிலேயே சிதைந்து சீர்குலைந்து போனது. பதினெட்டாவது நூற்றாண்டின் அரைப் பகுதி முழுவதும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் உலகைக் குலுக்கின.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் கைது தொடர்பாக தந்தித் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கிறார், உலகம் முழுவதும் சோசலிசமும் கம்யூனிசமும் இல்லை, இந்தியாவில் மட்டும் எப்படி நடைமுறக்குக் கொண்டுவரலாம் என்று.

மன்னர்களின் காலத்தில் ஊடகங்களும் விவாதங்களும் இருந்திருந்தால் முதலாளித்துவமும் அது கூறும் ஜனநாயகமும் சாத்தியமற்றது என்றே அந்தக்காலத்து தந்தித் தொலைக்காட்சி கூறியிருக்கும்.

இந்தியா இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் காலனி ஆதிக்க நாடுகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு இன்னும் எழுபது வயதுகூட ஆகிவிடவில்லை. பிரான்சிலும் பிரித்தானியாவிலும் முதலாளித்துவ ஜனநாயகம் முகிழ்ந்து வளர்ந்து ஐரோப்பா அமெரிக்கா எங்கும் கிளைபரப்பி இன்னும் மூன்றரை நூற்றாண்டுகள் கூட முடியவில்லை. மேற்கு ஏகாதிபத்திய நாடுகளில் ஜனநாயகம் காலாவதியாகிப் போய்விட்டது என மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

மேற்கு ஏகாதிபத்திய நாடுகளில் முதலாளித்துவம் தோன்றிய காலப்பகுதியில் காணப்பட்ட ஜனநாயகத்தின் எச்ச சொச்சங்கள் இன்னும் நிலைத்திருக்கின்றன.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் தனது இளமைக்கால களியாட்ட விழா ஒன்றின் முடிவில் போதை தலைகேற உயிரற்ற பன்றியுடன் உடலுறவு கொண்டார் என்ற தகவலை பிரித்தானியாவின் பல ஊடகங்கள் பரபப்புச் செய்தியாக வெளியிட்டன. டேவிட் கமரன் பன்றியுடன் தோன்றும் படங்களும் வெளியாகின. டேவிட் கமரனின் அண்மைய விருந்துபசார நிகழ்வில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

டேவிட் கமரன் விரும்புவது பன்றியையா மனைவியையா என ஊடகம் ஒன்று தலைப்புச் செய்தியோடு வெளிவந்தது.

இந்தியா போன்ற நாடுகளில் மேற்கு நாடுகளால் வலிந்து ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகத்தில் இவ்வாறான விமர்சனங்களுக்கு இடமில்லை.

இவ்விமர்சனங்களுக்கு இடமளிபதெல்லாம், மேற்கு நாடுகளில் ஜனநயகம் கொடிகட்டிப் பறக்கிறது என்பது அர்த்தமல்ல. ஆனால் விமர்சனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்டவர்களில் வாயில் மலம் ஊட்டுவதும், தெருவோரங்களில் வைத்து அவர்களைக் கொன்றுபோடுவதும் மக்கள் மத்தியில் பேசப்படாத தமிழகத்தில் பாடகர் கோவனைக் கைது செய்வததைத் தலைகுனிவாக எண்ணாதவர்கள் வாழ்வது வியப்பிற்குரியதல்ல.

அதிகாரவர்க்கத்தின் அடியாள் படைகளான ஆளும் கட்சிகளின் அரசியலை விமர்சித்தாலே சிறையிலடைக்கப்படுவார்கள். கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்.

கோவனின் பாடல் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலச் செயலாளர், கோவன் தனது பாடலில் பிரதமரையும், முதலமைச்சரையும் கொச்சப்படுத்துவதாகக் கூறி கைதை நியாயப்படுத்துகிறார்.

பலம் மிக்க மக்கள் ஜனநாயக அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கே இந்த நிலை என்றால், அப்பாவி மக்களின் நிலையை எண்ணிப்பார்க்கக்கூட முடியாது.
கோவன் கைது தொடர்பாகத் தெரிவித்த ஜெயலலிதாவின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சரஸ்வதி தமது தலைவர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதற்காகவே கோவன் கைதாகியுள்ளார் என்கிறார்.

பாடகர் கோவன் மீது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய 124- ஏ (தேசத்துரோகம்), 153-அ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட கடும் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துளதைப் பொதுவாக அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன. எது எவ்வாறாயினும் கைதை ஆதரித்து எந்தக் கூச்ச உணர்வும், அவமான உணர்வுமின்றிப் பேசுவதற்கும் தமிழகத்தில் ஒரு கூட்டம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்திய ஒட்டு ஜனநாயகம் ஏற்படுத்திய பின் தங்கிய சமூகத்தின் உள்ளூர் பிரதிநிதிகளின் ஜனநாயகம் என்பது மன்னர் காலத்தின் சர்வாதிகாரத்திலிருந்து பெரிதாக மாற்றம் பெறவில்லை.

Exit mobile version