Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

3 வருட முட்கம்பிச் சிறைகள் : பணம் கோரும் இலங்கை அரசு

போர் நடக்கும் முல்லைத் தீவுப் பகுதிகளிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு மறுவாழ்வு வழங்குவத்ற்காக் இலங்கை அரசு குறைந்தது மூன்று வருடங்களுக்காவது குவான்டனமோ சிறை போல முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட திறந்தவெளிச் சிறைச்சாலைகளை உருவாக்கியுள்ளது. இதற்கான பண வசதியை பிரித்தானிய அரசிடம் கோரியிருப்பதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மனோகணேசன் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில் இவை இடைத் தங்கல் முகாம்களாக அல்லாமல் தடுப்பு முகாம்களாகவே காட்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
ஹுமன் ரைட்ஸ் வாச் என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பும் இவற்றை தடுப்பு முகாம்கள் எனவே வர்ணித்துளது. இதே கருத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் இவானும் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் இவ்வாறு உருவாக்கப்பட்ட அகதி முகாம்கள் இன்றுவரை திறந்தவெளிச் சிறைச் சாலைகளாகவே காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version