கடந்த 9 மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினார்கள். மிகப்பெரிய அளவில் திரண்ட இந்த போராட்டம் பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடப்பது பாஜகவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்துத்துவ அமைப்புகள் வதந்தி ஒன்றை பரப்பியதால முசாபர்நகரில் இந்து முஸ்லீம் கலவரம் வெடித்து. இந்தக் கலவரத்தில் 50-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். ஏராளமான இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததால் இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்பது இங்கு சாத்தியமில்லாமல் இருந்தது. ஆனால் இந்த விவசாயிகள் போராட்டம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்துவது பாஜகவுக்கு பெரும் அச்சுறுத்தல்.
40 விவசாய சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டத்தை ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ அமைப்பு ஒருங்கிணைத்து அழைப்பு விடுத்திருந்தது.உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 300 விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அவர்கள் பேருந்துகள், கார்கள் மற்றும் டிராக்டர்களில் வந்து சேர்ந்தனர். கையில் கொடி, தலையில் பல வண்ண தொப்பியுடன் வந்தனர்.
இந்த மாநாட்டில் பேசிய பாரதீய கிசான் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக “அல்லாகு அக்பர்” என்று கோஷமிட அதை இந்து விவசாயிகளும் திருப்பிச் சொன்னார்கள்.
இந்த மாநாட்டையொட்டி ஐந்தாயிரம் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் குழிக்கப்பட்டிருந்தார்கள். பின்னர் மிக முக்கிய முடிவை இந்த பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
வருகிற 27-ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.