இந்திய வேளாண் உற்பத்தி பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டங்களுக்கு எதிராக வட இந்திய விவசாயிகள் பல மாதங்களாக போராடி வருகிறார்கள். பல்வேறு உயிரிழப்புகளுக்கு மத்தியிலும் நடக்கும் இந்த போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் அவைகளையும் மீறி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதனால் விவசாயிகள் போராடும் காரணத்தால் டெல்லி செல்லும் எல்லைகளை பொலீசாரே தடுப்புகளை வைத்து அடைத்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது எல்லைகளை விவசாயிகளே அடைத்ததாக மத்திய அரசு சொன்னது. அதை விவசாயிகள் மறுத்தனர்.
நாங்கள் சாலையின் இரு மருங்கிலும்ந்தான் போராடுகிறோம் சாலைகளை அடைத்து வைத்தது மத்திய அரசுதான் என்றனர். இதனையொட்டி மத்திய அரசு திக்ரி, காசிப்பூர் போன்ற பகுதிகளில் எல்லைத் தடுப்புகளை போலீசார் அகற்றினார்கள். ஆனால், எங்கள் போராட்டம் தொடரும் என அற்வித்துள்ள ராகேஷ் திக் அரசு நிறைவேற்றியிருககும் வேளாண் சட்டங்களை நவம்பர் 26ம் தேதிக்குள் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ்திக்கை ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜேஷ் திக்கின் அறிவிப்பை அனைத்து விவசாய அமைப்புகளும் வரவேற்றுள்ளன.