இலங்கையின் ஜனாதிபதி தனது சொந்த விருப்பின் அடிப்படையில் எந்த அரசாங்க அதிகாரியை நீக்கவோ அன்றி நியமிக்கவோ அதிகாரத்தை வழங்கும் இச் சட்டம், வாக்குகள் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், பாராளுமன்றத்தை தெரிவான ஒரு வருடத்துள் கலைக்கவும் ஜனாதிபதிக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளாரகப் பதவி வகித்த கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான இராணுவச் சர்வாதிகாரம் முழுமையான அளவில் நிறுவப்படுவதற்கான அதிகாரத்தை வழங்கும் இத் திருத்தச்சட்டம், முன்னைய 19 வது திருத்தச்சட்டத்தை நீக்கம் செய்கிறது.
ஏற்கனவே இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இராணுவ அதிகாரிகளே அரச நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இத் திருத்தச்சட்டமானது முழுமையான இராணுவ சர்வாதிகாரத்தை கோத்தாபய தலைமையில் நிறுவ அனுமதிக்கிறது.
சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரச அமைப்பு அனைத்து இலங்கையின் பௌத்த பீடங்களின் அனுமதியுடனும் ஆசியுடனுமே வரலாறு முழுவதும் திருத்தம் செய்யப்பட்டது. 20 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டு முக்கிய பௌத்த பீடங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிங்கள மக்களின் அரச எதிர்ப்போடு கைகோர்த்துக்கொண்டால், புதிய உழைக்கும் மக்களின் ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டமைக்கலாம். இதன் வழியாக மட்டுமே சிங்கள பௌத்த பேரினவாதத்தைப் பலவீனப்படுத்த முடியும். பின் தங்கிய இனவாத சிந்தனையிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்து அழிவை நோக்கி நகர்த்தும் தமிழ்த் தேசிய வெறியையும் நிராகரித்து சிங்கள பௌத்த பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தும் நுளைவாசலாக இன்றைய சூழலைப் பயன்படுத்த முடியும். சங்கரில்லா விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர், இலங்கை பௌத்த நாடு தான் என்று கூறிய கத்தோலிக்க திருச்சபை இச் சட்டத்தை எதிர்க்கிறது. பல்வேறு பௌத்த அமைப்புக்கள், பொது நலவாய நாடுகள் என்று உலகம் முழுவதும் தோன்றியுள்ள எதிர்ப்புணர்வு, ஒரு வகையில் சிங்கள பௌத்த பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பே.
புலம்பெயர் நாடுகள் சார்ந்து இலங்கையில் இயங்கும் சில அரசியல் கட்சிகள், இச் சட்டம் சிங்களவர்களுக்கு மட்டுமே எதிரானது என்று, தாம் ஒரு நாடு இரு தேசம் கோட்பாட்டைக் கொண்டவர்கள் என்றும், இதனால், தமிழர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுவதும் பல் வேறு சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது