Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

2020 ஒக்டோபர் 10- சபதம் : இராகலை மோகன்

School_in_Badulla_District

ஓவ்வொரு அறையிலும்
ஓ எஜ் பி (OHP)
ஒழுக்கமான மாணவர்
அறிவாளுமையுடைய
ஆசிரியர் கூறுகிறார்
எல்லோரும் ஆவலுடன்
அவதானித்து தேடலில்…..

எதிர்காலத்தை ஞாபகப்படுத்தும்
மணி – அடுத்த பாடத்திற்கு
ஆயத்தமாகும் மாணாக்கர்
விடைபெறும்போதே
புதிய ஆசிரியர்
வகுப்பறையில்

மேற்பார்வை, அவதானிப்பு
அதிபர் நடந்தவாறு….
வேலை நடக்கிறது
கற்பித்தலில் மும்முரமான ஆசிரியர்கள்
கற்பதில் ஆர்வமான மாணவர்கள்

வெளியில் ஆவலுடன்
ஆசிரியரை காண
காத்திருக்கும் பெற்றோர்
விருந்தினர் அறையில்
ரிங்…..ரிங்……
ஆசிரியர் காண காலவகாசம்
முறைப்பாடுகளும், தேவைகளும்
கலந்துரையாடல்…..
மாணவர் சுபீட்சமே இலக்கு.

ஒருகுழந்தை இடையில்
ஒய்யாரமாய் நடக்கும் கால்கள்
பழக்கப்பட்ட இடம்
மனதில் அச்சமும்
கடந்த நினைவுகளும்
ஒவ்வொருஅடியிலும்
உயிர்ப்பெறுகிறது.

தனக்குத் தானே
கணக்கு கற்பிக்கும்
கணக்காசிரியர்…..
சேலை விலை, அழகு,
லிப்ஸ்டிக், போ(க)ன்
ஆசிரியைகள் அங்காடி
மணியடித்தும் வகுப்பிற்கு வராத
ஆசிரியை அழைத்ததற்காய்
கொடுத்த அடி பரிசு
எல்லாம் ஞாபகம்

எட்டாம் ஆண்டில்
இடைவிலகல்
கிழிந்த சட்டை மாற்றி
மானம் காக்க
பணமில்லாமல்
வீட்டு வேலை பழகிய நாட்கள்
‘வேலைக்குப் போ’
விரட்டியடித்த தாய் !

வீட்டையும் பாடசாலையையும்
விட்டால் ஒன்றும் தெரியாத
பருவம்
ஒவ்வொன்றாய் கற்றுக்கொடுக்கும்
அடுப்படியும் செருப்படியும்
அடிக்காவிட்டாலும்
அழுதிடும் கண்கள்

நான்காவதாய் பிறந்தது
யார் செய்த குற்றம்?
கண்டியில் தெரிந்த
மாத்தியா வீடு..
நல்ல இடம்
தரகர் சிபாரிசு
வயசு போதாது
வெளிநாட்டில்
நல்ல வேi(ள)ல
நல்ல சம்பளம்
வயதெய்தி தொன்னூறு நாள்
வயிற்று வலி, pயனஇ பெம்பஸ்
ஒன்றும் தெரியாத மகள்
ஒன்றையும் கண்டு கொள்ளாத தாய், தந்தை
சொல்லவும் தெரியாமல்
மெல்லவும் முடியாமல்……

கிச்சனில் உறங்கி
சோறு கறி உடை துவை
ஏறாளமான சூட்டுக்காயப்பரிசுகள்
வெள்ளக்காரிபோல் இருக்கா
தீபாவளிக்கு வருவா
துன்பம் தீர்ப்பாள்……
பணத்துடன் -மது
மணத்துடன் தந்தை
அடிமைசாசன சொந்தக்காரர்கள் போலும்
பணம் கண்டதும்
பாசம் போனது.

உயர்ந்து வளர்ந்து
உருவம் மாறி
குமரியும் மங்கையுமாய்

மாத்தியா நல்லவர்- அவள்
மார்பைப்பார்க்கவே
மாப்பிள்ளை சனி, ஞாயிறு
விடுமுறையில் தனதறையில்
வீடுதுடைக்கவே விடமாட்டார்
அங்கும் இங்குமாய்

இடித்தும், கிள்ளியும்
மல்லுக்கட்டியும்
ஒருமுறையில்லை
வீட்டுக்குப்போகவே கால்கள் பறக்கும்
வயிறு மறுக்கும்
இருபது தடவைகளில்
பத்து தடவைகள் வீட்டுக்கு சொல்லியும்
ஒன்றும் பயனில்லை
ஒப்பன் குடிகாரன்
ஒம்மாள் மக்கு
ஓங்கியடித்தாள்
ஆணுருப்பு பிதுங்கி
வடிகிறது இரத்தம்
மனதில் சத்தம்
ஓ….டி வந்தது ஞாபகம்

சரஸ்வதிக்கு நடந்தது போல
மகளுக்கு நடக்காமல் இருக்க
‘செத்தாலும் வீட்டுவேலைக்காக
விடமாட்டேன்’
சபதத்துடன்
2020 ஒக்டோபர் 10 ம் தினத்தன்று சரஸ்வதி.

-இராகலை மோகன்-
2014.10.18 பி.ப 5.45 மணி

Exit mobile version