Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

129 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடியாக மோதும் திமுக!

தமிழக தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றே பிரச்சாரத்தைத் துவங்கி விட்டார்.இன்று திமுக 173  தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதில் அதிமுக போட்டியிடும் 129 தொகுதிகளில் திமுக  நேரடியாக போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா போட்டியிடும் 20 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக பாஜகவுடன் மோதுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 23 தொகுதிகளில் 18 தொகுதிகளில் திமுக பாட்டாளி மக்கள் கட்சியுடன் மோதுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் கேட்ட தொகுதிகளைக் கொடுத்து விட்டு தான் நேரடியாகவே பெரிய கட்சிகளுடன் மோதுகிறது.

திமுக அறிவித்துள்ள 173 பேர் அடங்கிய பட்டியலில் 74  புதிய வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே போட்டியிட்ட 20 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல பிரபலங்களில் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற போதிலும் சில பிரபலங்களில் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போட்டியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் துணை முதல்வர்  ஓ.பன்னீசெல்வத்தை எதிர்த்து  அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த தங்க. தமிழ்செல்வம் போட்டியிடுகிறார். இவர் தாமரைக்கனி என்ற முன்னாள் அதிமுக பிரமுகரின் மகன்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அவரை எதிர்த்து 37 வயதே ஆன சம்பத் குமார் என்ற இளைஞர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். எம்.சி.ஏ பட்டதாரியான இவர் உள்ளுரில் விவசாயம் செய்கிறார்.   உள்ளூர் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற இவர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Exit mobile version