Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹரியாணா மாநிலத்தில் பாஜக நிகழ்ச்சிகளுக்கு விவசாயிகள் தடை!

மோடி அரசு அமல் செய்த மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் மேலும் மேலும் தீவிரம் பெற்று வருகிறது. இந்த போராட்டம் பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 60 பேர் வரை கடுங்குளிரால் இறந்து விட்ட நிலையிலும் போராட்டம் தீவிரம் பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று (10-01-2021) அன்று ஹரியானா மாநில பாஜக முதல்வர் கட்டார் :கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் விவாசாயிகள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இது போன்ற கூட்டங்களை இந்தியா முழுக்க  பாஜக  திட்டமிட்டிருந்தது. தமிழகத்திலும் சில கூட்டங்களை நடத்தி  விட்டு எதிர்ப்பு காரணமாக கைவிட்டு விட்டது பாஜக அரசு.

இந்நிலையில்,  ஏராளமான விவசாயிகளை திரட்டியிருந்த ஹரியானா மாநில பாஜக  இப்பகுதிக்கு போராடும் விவசாயிகள்  வருவதை தடை செய்திருந்தது, சாலைகள் மறிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்ட நிலையில், முதல்வர் கட்டார்  பொதுக்கூட்ட மேடையின் அருகிலேயே ஹெலிகாப்டரில் வந்திறங்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு விவசாய மசோதாக்களுக்கு எதிராகப் போராடும் ஹரியானா விவசாயிகள் செல்ல இருந்த நிலையில் போலீசார் அவர்கள் செல்லும் வாகனங்களை தடுத்த நிலையில், அவர்கள் நடந்தே பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார்கள். போலீசாருக்கும் அவர்களுக்கும் மோதல் வெடித்ததால் பொதுக்கூட்ட மேடையை விவசாயிகள் தாக்கினார்கள்.  அங்கு வைக்கப்பட்டிருந்த இருக்கைகளை தூக்கி வீசினார்கள். அவர்களை போலீசாரால் சாமதானப்படுத்த முடியவில்லை. ஹெலிகாப்டரில் வந்த ஹரியானா முதல்வர் கட்டாரால் தரையிரங்க முடியாத அளவுக்கு நிலமை சிக்கலாக நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அப்படியே வான்வழியாக திரும்பிச் சென்று விட்டார் பாஜக முதல்வர் கட்டார்.

விவசாயிகள்  ஹரியானா மாநிலத்தில் பாஜக நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் சென்று போராட்டம் நடத்துவோம். விவசாயச் சட்டங்களை ரத்து செய்யாமல்  அதனால் விவசாயிகளுக்கு ஆதாயம் உள்ளது என்று பொய்யான பிரச்சாரம்  செய்தால் அதை முறியடிப்போம் என்று அறிவித்துள்ளார்கள். பஞ்சாப் மாநிலத்திலும் ஏன் தமிழகத்திலும் கூட பாஜகவினரின் விவசாய மசோதா ஆதரவுக் கூட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

Exit mobile version