ஹட்டனில் இடம்பெற்ற ஊற்றுக்களும் ஓட்டங்களும் நூல் விமர்சனம்:
மலையக இலக்கியத்தின் செல்நெறிகள் குறித்த கருத்தாடல்களுக்கான பகிர்வு
சமூக செயற்பாட்டாளர் மு.இராமச்சந்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. கலாநிதி ந.இரவீந்திரன் தலைமையுரையாற்றினார். மலையகத்தின் அரசியல் சமூக செயற்பாடுகளின் போக்கு பற்றியும் மலையகத்தின் இன்றைய செல்நெறி குறித்தும் தலைமையுரையில் பதிவு செய்த கலாநிதி இரவீந்திரன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மலையக இலக்கியம் குறித்த விமர்சன ரீதியான
1980 களில் தொழிற்சங்கம் அல்லாத அரசியல்மயப்படுத்தலை மலையகத்தில் ஏற்படுத்த முடிந்தது எனினம் அதனை தொடர்ந்தேர்ச்சியாக செயற்படுத்த முடியாது போனமை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்களின் தவறாகவே கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் நN;டசய்யர் தம்பதிகளின் இலங்கை எமது நாடு என்கின்ற கருத்தியலை நினைவூட்டும் அதேநேரம் சி.வி முதல் சிவனு மனோகரன் முதலான இன்றைய படைப்பாளிகள் வரையான ஆக்கங்களை விமர்சன பார்வையுடன் முன்வைக்கும் இந்த நூலின் வருகை ஒரு புதிய திசையைக்காட்டி நிற்பதாக தெரிவித்தார்.
நூலின் சிறப்பு பிரதியினை மூத்த தொழிற்சங்கவாதி திரு.ஆறுமுகம் அவர்களிடம் இருந்து சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியர் சிவலிங்கம் சிவகுமார் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பல்வெறு அரசியல், தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களும் சிறப்பு பிரதிகளைப்பெற்றுக்கொண்டனர்.
நூல் குறித்த விமர்சனங்களைப்பதிவு செய்த மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் விமர்சன நூல் ஒன்றை விமர்சனத்துனத்துக்கு உட்படுத்துவது வித்தியாசமான அனுபவம் என்றார். அதேபோல மலையகத்தில் கட்டுரை இலக்கியத்தை ஒரு துறையாக தெரிவு செய்துகொண்டு லெனின் மதிவானம் முக்கிய பணியினை ஆற்றிவருகிறார். இதற்கு முன்னர் அருட்தந்தை கீத பொன்கலன் இவ்வாறான பணிகளைச் செய்துவந்துள்ளார். லெனின் மதிவானம் அவர்களின் இடைவிடாத வாசிப்பும் அவருடைய பார்வைகுறித்த பதிவும் தொடர்ச்சியாக நடைபெறுவது பாராட்டுக்குரியது. எனினும் பேராசியரியர் கைலாசபதியின் தாக்கமும் அவரது கோட்பாடுகள், எல்லைக்குள்ளேயே லெனின் மதிவானம் அவர்களின் வாசிப்பு தேடல்கள் அமைவது விமர்சனத்துக்கு உரியது. ஓர் படைப்பாளன் இப்படித்தான் எழுதவேண்டும் என யாரும் தீர்மானம் போடமுடியாது. மாறாக படைப்பாளனது எழுத்துக்களை ஊக்குவிப்பதாக விமர்சனங்கள் அமையவேண்டும்.
அடுத்து விமர்சனபார்வையை முன்வைத்த ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதி வ.செல்வராஜா மலையகத்தின் தற்கால இலக்கிய செல்நெறியில் லெனின் மதிவானத்தின் பார்வை மிக முக்கியமான வேண்டுதல்களை கோரி நிற்கின்றது. மலையக இலக்கியத்தில் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் பங்களிப்பை யாரும் மறுதலிக்கவோ குறைத்து மதிப்பிடவோ முடியாது. அதே நேரம்; நாம் இந்த நாட்டுக்குரியவர்கள் இந்த மண் நம்மால் ஆக்கப்பட்டது எனும் கருத்துக்களை விதைத்த நடேசய்யர் தம்பதிபதிகளின் செயற்பாடுகள் பணிகள் மீளவும் நினைவுறுத்தப்படவேண்டிய காலகட்ட்தில் இன்னும் மலையகம் உள்ளது. மலையகம் நமக்கான மண் என்பதையும் நாம் மலையக தேசியத்துக்கு உரியவர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய காலகட்டம் இது. இதற்கு முந்தைய தலைiமுறையினரான சி.வி., தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம்.இராமையா, மு.சிவலிங்கம் முதலானோர் மக்கள் இலக்கிய படைப்பாளிகளாகவே இருந்துள்ளனர். மலையக மக்களைவிட்டு வேறு விடயங்கள் பாடுபொருளாகக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அவர்களுக்கு இயல்பாகவே அமையவில்லை. ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. மலையகத்திலும் அதற்கு வெளியேயும் இடம்பெற்ற, இடம்பெற்றுவரும் அரசியல் சமூக அசைவியக்கங்கள் சமூகம் மற்றும் மக்கள் குறித்த பார்வையாக அல்லாமல் தனிமனித பதிவுகளாக இலக்கியங்கள் அமைந்துவிடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது என்பதையே லெனின் மதிவானம் அவர்கள் இந்த நூலில் குறிப்பிடுகின்றார். மலையக மக்களின் துன்பியல் நிறைந்த வருகையை, தோட்ட முதலாளிகளின் சுரண்டலை, தொழிலாளர் போராட்டங்களை, மக்களுக்காக உயிர்நீத்த தியாகங்களை, மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமையை, நாடுகடத்தப்பட்டமையை பதிவுசெய்த இலக்கியங்கள் இன்று தனிப்பட்ட மனிதர்களின் தாபங்களையும். ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் பதிவு செய்ய விளைவது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்பதே இங்கு அவதானிக்கப்படவேண்டியது.
அண்மைக்காலங்களில் ‘கோடாங்கி’ சிறுகதை தொகுப்பைத்தந்த சிவனு மனோகரன், ‘அவமானப்படவனின் இரவு’ கவிதைத் தொகுப்பைத்தந்த கருணாகரனின் படைப்பாளுமை எந்தவகையிலும் குறைவானது அல்ல. இயல்பாக சொற்கள் வந்து விழும் லாவகமான நடையை அதில் தரிசிக்கலாம். ஆனால் தேயிலைத்தோட்டத்திலே, உழைக்கப்பிறந்தவர்கள், ஒரு கூடைக்கொழுந்து, மலைகளின் மக்கள், பேப்பர் பிரஜைகள் என எழுதிவந்த மலையக இலக்கிய செல்நெறி இன்று இத்தகைய இளம் ஆளுமைகளின் பார்வைகளை தனிமனித தாபங்களுக்குரிய படைப்புகளாக இட்டுச்சென்றிருக்கக்கூடிய ஒரு உலகமயமாதல் ஆக்கிரமிப்பையும் சமூகத்தில் இருந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தள்ளிவைக்கும் ஒரு இயங்குசக்தி தொழிற்படுவதையுமே காட்டி நிற்கின்றது. இப்படியொரு நிலைமைக்கும் காலகட்டத்திற்கும் நாம் இட்டுச்செல்லப்படுகிறோம் என நாம் நம்மை சுதாகரித்து அடையாளம் காண மறுப்பதே பின்னாளில் ஒரு வரலாற்று தவறாகிவிடும். அந்த வகையில் லெனின் மதிவானத்தின் விமர்சனபார்வை முக்கியத்தவமுடையது. எனவே மலையக இலக்கிய பண்பாட்டுக்கு உள்ள தனித்துவமான மக்கள் இலக்கியம் நோக்கி இளம் படைப்பாளிகள் கவனம் திரும்ப வேண்டும். இன்று இடம்பெறக்கூடிய தொழிலாளர் பிரச்சினைகள், மலையகதேசியம் தொடர்பான பிரச்சினைகள், மலையக மக்களின் இருப்பு தொடர்பான விடயங்கள், தோட்டங்களில் இருந்து கல்விசாலைகளுக்கு மாற்றப்பட்டிருக்கும் கங்காணி கலாசார முறைமையின் மோசமான பக்கங்களையும் இலக்கியபடைப்புகள் வெளிப்படுத்தவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பினை லெனின் மதிவானம் அவர்கள் கொண்டிருப்பது இளம் படைபாளிகள் மீதான விமர்சனமாக அமையாது மாறாக அவர்களை வழிப்படுத்துவதாகவே அமையும் எனவும் குறிப்பிட்டார்.
முச்சந்தி இலக்கிய வட்டத்தின் சார்பில் ஆசிரியர் எம்.எஸ்.இங்கர்சால் நிகழச்சிகளை தொகுத்து வழங்கினார். மலையக மக்கள் முன்னிணி செயலாளர் அ.லோரன்ஸ், தொழிலாளர் தெசிய சங்கத்தின் செயலாளர் எஸ்.பிலிப், மூத்த எழுத்தாளர் மொழிவரதன் இளம் எழுத்தாளர்களான சிவனு மனோகரன், தவச்செல்வன், சரவணகுமார். லிங்கன் பதிப்பக உரிமைளார் கிருபா லிங்கதாசன், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்புக்குரியது.