Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஸ்பெக்டரம் வழக்கின் அடிப்படையே தகர்ந்தது நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட வினோத் ராய்!

2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிட்டமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார் முன்னாள் சி.ஏ.ஜி  தலைவர்  வினோத் ராய்.2- ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக வினோத் ராய் அறிக்கை தெரிவித்ததையடுத்து மத்திய அமைச்சரும் திமுக பிரமுகருமான ஆ.ராசா கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி தேர்தலில் படு தோல்வியடைய அலைகற்றை ஊழல் வழக்கே காரணமாக அமைந்தது.திமுகவின் தோல்விக்கும் அதுவே காரணம்.

இப்போது 2ஜி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபமை தொடர்பு படுத்தி பேசியமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிமன்றத்தில் கேட்டிகிறார் வினோத் ராய்.

வினோத் ராயின் அறிக்கை அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்தது அந்த வழக்கில் ஒரு சாட்சியங்களைக் கூட அரசால் நிறுத்த முடியவில்லை. இந்த வழக்கே ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று தீர்ப்பளித்து ஆ.ராசாவை விடுதலை செய்தது நீதிமன்றம். இப்போது வினோத் ராய் தயாரித்த அந்த அறிக்கை தொடர்பாக பல உண்மைகள் வெளியாகி வருகிறது.

யாரையோ திருப்தி படுத்த அறிக்கை தயாரித்த வினோத் ராய் அந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என சி.ஐ.ஏ விடம் கோரியதாகவும் ஆனால் சி.ஐ.ஏ மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் நிருபம், “2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது தவறான அறிக்கை சமர்ப்பித்து அவதூறு கிளப்பிய குற்றத்திற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version