Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஸ்டாலின் தொடர்பாக இன்னொரு குறிப்பு : சபா நாவலன்

ஜோன் பெர்க்கின்ஸ் என்ற, அமெரிக்க உளவுதுறை அமைப்புக்களுக்கு வேலை செய்த, மூன்றாமுலக நாடுகளில் கிரிமினல் வேலைகளில் அமரிக்காதிகார வர்கம் சார்பாக ஈடுபட்ட பொருளியலாளரான அமரிக்கர், தனது வேலையை ராஜினாம செய்த பின்னர் தான் முன்னின்று நடத்திய கிரிமினல் நடவடிக்கைகள் பற்றி எழுதிய நூலான “பொருளாதார அடியாளின் மனச்சாட்சி” என்பது பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிக்கொண்டு வருகிறது.

எகுவடோர் என்ற நாட்டில் எண்ணை வளத்தைத் திருடுவதற்காக அமரிக்காவால் அனுப்பப்பட்ட இவர், எவ்வாறு உதவி அமைப்புகளூடாகவும், நிறுவனங்களூடாகவும் மக்கள் மத்தியிலும் அரசியல் அமைப்புகள் மத்தியிலும் முரண்பாடுகளை உருவாக்கி, அடிமட்ட மனிதன் வரை, தனது கருத்துக்களை விதைத்து அமரிக்க உளவு அமைப்புக்கள், மூன்றாமுலக நாடுகளைச் சீரளிக்கின்றன என்று மேலதிகமாக விளக்கும் இவரது இரண்டாவது நூல் ஏகாதிபத்தியங்களின் கொருhரத்தையும் மனித விரோத நடவடிக்கைகளை யும் புரிந்துகொள்ள மிகவும் உறுதுணையாகவே அமைகிறது.

உலகம் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மத்தியில் பிரபலமான இவரது நூல்கள், எம்போன்றவர்களை மேலும் சிந்திக்கத் வைக்கிறது. இந்த நூல்களை வெளியிட முற்பட்டபோது எதிர் கொண்ட சிக்கல்களையும் ஆபத்துக்களை தனது நேர்முகங்களில் கூறியுள்ளார்.

ஸ்டாலினுடைய காலகட்டத்தின் போது உலகம் குறிப்பாக இருதடவைகள் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் தலமையில் மறு ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டது. இதற்காக அனைத்து சக்திகளையும் திரட்டிக்கொண்ட ஏகாதிபத்தியங்களின் ஸ்டாலின் மீதான தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்பன முதலாளித்துவ ஊடகங்களின் ஊடாக மட்டுமே எமக்குக் கிடைத்தன. போலந்து மாஸ் கிறேவ் தொடர்பான ஆவணங்களும் தகவல்களும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டதாகவே நம்பி இருந்த எல்லோரும் அவற்றின் உண்மை தொடர்பாக ரஷ்ய ஆவணங்களுடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்புகின்றனர். தர்க்க ரீதியான அணுகுமுறையின்றி ஏகதிபத்தியதால் உருவாக்கப்பட்ட சிந்தனைமுறைகளால் ஆட்கொள்ளப்பட்டு, மேற்கத்தியச் கல்வியாளர்களின் திட்டமிட்ட திரிபுகளுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதையே பெருமையாக எண்ணும் மத்தியதர வர்க்க கல்வியாளர்கள் தொடர்பாக விழிப்படைய வேண்டும். சமூக அக்கறையுள்ள இடதுசாரிகள் தமது விமர்சனப் பார்வையையும் தேடலையும் ஆழப்படுத்துவதனூடாக ஏகதிபத்தியச் சிந்தனை முறைக்கெதிரான போராட்டத்தை தொடர்வார்கள் என்பது உறுதி.

ஸ்டாலின் போன்ற இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் நடைமுறை வடிவத்தை உலகுக்குக் காட்டிய சமூக விஞ்ஞானிகளையும், புரட்சியாளர்களையும் சேறடிக்கும் ஏகாதிபத்தியங்களுடன் அணிசேராமல் தர்க்கரீதியான விமர்சனப் பார்வையை முன்வைக்க வேண்டும் என்பது அவசியமானதாகும்.

லெனின் கூறுவதுபோல், மார்க்ஸியர்களால் முன்னெப்போதுமே அணுகப்பட்டாத தேசியப்பிரச்சனையை பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்த ஸ்டாலினுடைய பங்களிப்பு வராலாற்று முக்கியத்துவமுடையதாகும். ஆறுமுகத்திலிருந்து அண்டர்சன் வரைக்கும் இதை நிராகரித்தவர்கள் கிடையாது.

வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தை ஏற்றுக் கொள்வீர்களானால், மார்க்ஸிய முறையை ஏற்றுக்கொள்வீர்களானால், வரலாற்றுப் பொருள்முதல் வாத அடிப்படையில் இந்தத் ததுவத்தை பிழையென நிறுவலாமே! ஒரு குருவி கூவவில்லை.

நான் எல்லாம் வல்ல ஸ்டலின் ஆண்டவன் ஸ்டாலின் என்று கூறவில்லை.
ஏகதிபத்திய சிந்தனைமுறையிலிருந்து சுதந்திரமான் தர்க்கவியல் அடிப்படையிலான விம்ர்சன முறையையே கோருகின்றேன்.

கம்யுhனிஸ்டுக்ளின் போராட்டத்தின் தோல்வியில் ஒரு பொதுமைபாடு காணப்படுகிறது. தோல்வியின் இந்தப் பொதுமைப்பாடுகளைப் பல புரட்சிகர இயக்கங்கள் கூட கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. இதற்கு ஸ்டலின் மீதான தனிமனிதப் பற்றும் ஒரு காரணமாகும்.

கட்சி என்பது மிக உன்னதமான சமூக உணர்வு கொண்டவர்களால் ஆரம்பிக்கப்படலாம். தியாகிகளின் கூடமாக இருக்கலாம். ஆனால் தனிமனிதர்களின் கூட்டு என்பதுதான் கட்சி. தனிமனிதனின் சிந்தனைப் போக்கானது அவனது வாழ் நிலைக்கேற்ப மாறுபடக் கூடியது. கட்சி என்பது பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களின் நேரடிகண்காணிப்பில் இருக்கும் வரை மட்டும்தான் மக்கள் நலன் சார்ந்ததாகவமையும். இதற்கு மக்கள் பலமானவர்களாக அமைந்திருக்க வேண்டும். மக்களுடைய பலம் என்பது அவர்கள் தமது வர்க்க நலனின் அடிப்படையில் அமைப்பாதல் வேண்டும். இந்த அமைப்பு என்பதே வெகுஜன அமைப்புக்களாகவும் சோவியத் நிர்வாக அமைப்புக்களாகவும் சோவியத் ரஷ்யாவில் அமைந்திருந்தன. ஆரம்பத்தில் கட்சியானது இவ்வமைப்புக்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே இருந்த்தது. மக்களுக்கு தமது பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் உரிமைகூட இருந்தது.

ஸ்டலினின் ஐந்தாண்டுத் திட்டத்தில் கூட்டு விவசாயத் திட்டம் தொடர்பாக நில உடமை மனோபாவத்தில் கட்டுண்டு போயிருந்த விவசாயிகள் மத்தியில் இருந்து பல எதிர்ப்புக்கள் உருவாக அந்த எதிர்ப்புக்களை ஏகாதிபத்திய சக்திகளும் அதன் உளவாளிகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் விவசாயிகள் மத்தியில் இருந்த சோவியத்துக்களும் வெகுஜன அமைப்புக்களும் தேசிய மயமாக்கப்பட்டு கட்சியின் கட்டுப்பட்டடுக்குள் கொண்டுவரப்பட்டது. கட்சியின் உறுப்பினர்களே கட்சியின் கண்காணிப்பாளர்களாக மாறினர். கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்க மக்கள் பலம் இல்லாமல் போனது. பலம் வாய்ந்த மக்களமைப்புக்கள் கட்சியின் வால் அமைப்புக்களாக்கப்பட்டன. இதனால் மூன்று பிரதான விளைவுகளை உருவாகி வளர்ந்து கொண்டுருந்த சோசலிசத்தைத் தாக்கியது.

1. மக்களால் தெரிவு செய்யப்படும் நிலையில் இருந்து கட்சியால் தெரிவு செய்யப்படுதல் என்ற நிலைமைக்கு நிர்வாக அமைப்பு மாறிப்போனதில் கட்சி அதிகாரம் மிக்க சர்வாதிகார அமைப்பாக மாற ஆரம்பித்தது.

2. கட்சிக்குள் குர்ச்சேவ் போன்ற சந்தர்ப்ப வாதிகள் புகுந்து கொண்டனர்.

3. ஏற்கனவே அமைப்பகி இருந்த வெகுஜன தொழிலாளர் அமைப்புக்கள் தமது தனித்துவத்திற்காகப் போராட ஆரம்பித்த போது, அதனை எதிர்ப்புரட்சிகர சக்திகளும் ஏகாதிபத்தியமும் பாவித்து, சோஸலிச அரசிற்கு எதிரான எதிர்ப்புரட்சிப் போராட்டங்களாக மாற்ற முனைந்த்த போது, அதற்கெதிரான போராட்டங்களூடன பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.
படிப்படியாகக் கட்சி என்பதே அதிகார அமைப்பாக மாற ஆரம்பித்தது. கட்சிக்காகவே எல்லாம் என்ற நிலை ஏற்பட, ஒருபுறத்தில் கட்சியும் மறுபுறத்தில் மக்களும் என்ற முரண்பாடு வளர ஆரம்பித்தது. இறுதியாகக் சோசலிஸம் சீர்குலைக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் சொவியத் ரஷ்யாவின் பொருளாதாரத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தின் மேற்கட்டுமானமான சித்தாந்தம், ஒழுக்க முறைகள், பண்பாட்டு அம்சங்கள்  ஆகியவற்றை புறக்கணித்து  ஸ்டாலின் சார்ந்தவர்கள்  பொருளாதார வாதத்தையும்  முன்வைத்தனர். இப் பொருளாதார வாதமானது உலகப் பொதுவானதாக மாற்றப்பட்டு உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் விதைக்கப்பட்டது.

இதற்கான தத்துவார்த்தப் போராட்டங்களும் கூட சோஷலிச சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதில் மக்களின் பாத்திரம் தொடர்பான விவாதம் என்ற தளத்திலல்லாமல் சமூக மாற்றத்தில் மேற்கோப்பின் பங்கு தொடர்பான விவாதங்களாக மட்டுமே அமைந்திருந்தது. இதனால்தான் மாவோ ஆட்சியில் மேற்கோப்பான கலாச்சாரம் பண்பாடு தொடர்பான கருத்தோட்டங்கள் முக்கியத்துவம் பெற, வன்முறையோடு கலாச்சாரப் புரட்சிநடந்தேறியது.

சீனாவிலும் இதேபோன்ற ஒருநிலையில் தான் உருவான சோஸலிசம் சர்வாதிகாரமாக மாறிப்போனது. கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னதான காலகட்டத்தில் கம்யூன்கள் கட்சியின் அங்கங்களாக மாற்றப்பட்டடது. மூன்றில் ஒருபகுதியே கட்சியின் உறுப்பினர்களாக அமைய வேண்டும் என்ற முன்னதாக வரையறுக்கப்பட்ட நிலை மாறிப்போனதுடன், கட்சி சர்வாதிகார அமைப்பாக மாறிபோக, மவோ சொன்ன அதே முரண்பாடு, கட்சி என்ற அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையிலானதாக அமைய உற்பத்திசக்திகளின் வளர்ச்சி தடைப்பட்டது. வியட்னாமிலும் கூட இதேவகையான போக்கினைக் காணலாம்.

ஏன் நமது இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான போராட்ட வரலாற்றை எடுத்துக் கொள்வோம். ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற அமைப்பு மட்டுமே தன்னகத்தே வெகுஜன அமைப்புக்கான கொள்கை ஒன்றைக் கொண்டிருந்தது. பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட மக்களான கூலி – வறிய விவசாயிகளை அமைப்பாக்கிய இந்த இயக்கம், பின்னதாக 1983 இலிருந்து இந்த அமைப்புக்களை தனது கட்சியின் அங்கங்களாக மாற்றிய பின்னர், இந்த மக்கட் பிரிவுகளில் இருந்து அன்னியப்பட்டுப் போனதுடன், எல்லாமே தலமைக் கட்சியில் தங்கியிருக்கும் நிலைக்கு மாறியது மட்டுமல்ல, முழுக்கட்சியும் புலிகள் போன்ற சர்வாதிகார அமைப்பாக மாறிப்போனது.

பெரும்பாலான கிராமங்கள் சுதந்திர அமைப்புக்களாக இருந்த கிராமிய உழைப்பாளார் சங்கம் போன்றவற்றுடன் இணைந்து கொண்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் ஈ.பீ.அர்.எல்.எப் அழிக்கப்பட்ட போது இந்த அமைப்பச் சாராத கிராமிய உழைப்பாளர் சங்கம் இந்த அமைப்பின் பல உறுப்பினர்களைப் புலிகளின் கொலை வெறியில் இருந்து பாதுகாத்தது.

என்.எல்.எப்.ரீ, பி.எல்.எப்.ரீ. போன்ற இயக்கங்கள் நாடுதளுவிய இவ்வாறான் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கியதாகத் தெரியவில்லை. கட்சிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதிலும் கட்சியின் அங்கங்களை உருவாக்குவதிலும்மே தீவிரம் காட்டிய இவர்கள், அமைப்பாக்கப்பட்ட மக்களின் கண்காணிப்புக்குள் அமைந்த கட்சியாக உருவாவதைத் தமது கடமையாகக் கருதவில்லை.

இது இந்திய இடதுசாரிகளிடம் இருந்து இவர்கள் கற்றுக் கொண்டதாகக் கூடக்கருதலாம். நக்சல் பாரி அமைப்புக்களில் இருந்து உருவாகை விரிந்த இந்திய கம்யுனிஸ அமைப்புக்கள் பரந்துபட்ட வர்க்க அடிப்படையிலான சுதந்திரமான மக்கள் அமைப்புக்களைக் கட்டி வளர்ப்பதிலும் அவற்றிற்கு கொள்கை ரீதியிலான தலைமை தாங்குவதிலும் பிரதான கடமையாகக் கருதுவதில்லை. இது தொடர்பான விவாதங்கள் கூட முன்வைக்கப்படு வதில்லை. இந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இவை தொடர்பான விவாதங்களை முன் வைப்பதனூடாக. ஸ்தாபன அமைப்புமுறை தொடர்பான புதிய கருத்துக்களை தர்க்கரீதியாக உருவாக்கலாம். இவ்வாறன விவாதங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமது பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி : http://thesamnet.co.uk/?p=160 (தேசம்நெட்)

Exit mobile version