Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஸ்டாலின் அமைச்சரவையில் புதியவர்கள்!

நாளை தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுடன் சுமார் 30 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள்.வழமையான அமைச்சரவையாக இல்லாமல் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திமுகவின் பிரபலங்களின் வாரிசுகளும் முத்தோர்களுமே அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். ஆனால் இம்முறை சரி பாதி சீனியர்களுக்கு இடம் கொடுத்துள்ள ஸ்டாலின் சரிபாதி புதியவர்களுக்கும் இடம் கொடுத்துள்ளார்.

வழக்கமாக பொதுப்பணித்துறை போன்ற முக்கிய பதவியில் அமரும் துரைமுருகன் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஆகி உள்ளார். அதே போன்று வழக்கமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவையில் உள்ளவர்கள் புதிய அமைச்சுப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். பட்டியல் விபரம் கீழே,

ஸ்டாலின் – முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்)

துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை

கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

ஐ பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்

ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்

ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர்

பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் – ஊரக தொழில்துறை அமைச்சர்

எம்.பி சாமிநாதன் – செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

கீதா ஜீவன் – சமூக நலத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் – போக்குவரத்து துறை அமைச்சர்

கே.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி – உணவுத்துறை அமைச்சர்

வி.செந்தில் பாலாஜி – மின்சாரத்துறை அமைச்சர்

ஆர்.காந்தி – கைத்தறித்துறை அமைச்சர்

மா.சுப்ரமணியன் – சுகாதாரத்துறை அமைச்சர்

பி.மூர்த்தி – வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பி.கே.சேகர் பாபு – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் – நிதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

சா.மு.நாசர் – பால் வளத்துறை அமைச்சர்

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சிவ.வீ.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர்

சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ் – ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்

Exit mobile version