Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகச் சொன்ன சீமான் பின்வாங்கியது ஏன்?

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.


நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்து போட்டியிடுவதுவாக முன்னர் அறிவித்திருந்ததால் அவர் திருவொற்றியூரில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.


கொளத்தூர் தொகுதியில் ஏன் சீமான் போட்டியிடவில்லை என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் சீமான் போட்டியிடும் தொகுதி எது என்பதை ஆராய ஒரு குழுவை சீமான் அமைத்த நிலையில் அவர் சென்னை நகருக்குள் போட்டியிடுவதே சிறந்தது என ஆலோசனை சொன்ன அந்தக் குழு. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் டெப்பாசிட் பெருவதில் சிரமங்கள் இருக்கும் ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் வென்ற நாள் முதல் இன்று வரை வாரம் ஒரு முறை தொகுதிக்கு விசிட் அடிப்பதோடு அங்குள்ள மக்கள் ஒவ்வொருவருவரோடும் தொடர்பில் இருக்கிறார். ஏராளமான பணிகள் தொடர்பாடல் காரணமாக அந்த தொகுதியில் அதிமுக போட்டியிட்டாலும் வெல்ல முடியாது. நாம் டெப்பாசிட்டே பெற முடியாது. என்று அந்த குழு அறிக்கை அளிக்க சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று ஆலோசனைக் கூற அதை சீமான் ஏற்றியிருக்கிறார்.


2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.அந்த தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சீமான்.2016ஆம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.1% வாக்குகளைப் பெற்ற சீமான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளில் மூன்றாம் இடங்களைப் பெற்றது. அதிலொன்று திருவொற்றியூர் இது வட சென்னை மக்களவைத் தொகுதியில் வருகிறது. இந்த வட சென்னை மக்களவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றதால் திருவொற்றியூர் தொகுதியை தெரிவு செய்தார் சீமான்.


பெருமளவு கடலோர மக்களும், நாடார்களும் , பிற சாதியினரும் வாழும் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வெற்றி பெற சாத்தியமில்லை என்ற போதும் ஓரளவு வாக்குகளைப் பெறும் சாத்தியங்கள் உண்டு. ஆனால், கொளத்தூரில் போட்டியிடுவதாகச் சொல்லி விட்டு பின்வாங்கியதை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

Exit mobile version