-சேது
மாபெரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்
தமிழ் பேசும் மக்களே வாக்களியுங்கள்
வேட்பாளர்களின் அன்பான வேண்டுகோள்
1.சம்தன் ; சின்னம் சிரட்டை
நான் தமிழ் மக்களின் விடுதலைக்காக சட்டரீதியாக போராடியவன். ஆயுதப்போராட்டம் பிடிக்காததால் நான் கொஞ்சக் காலம் ஒதுங்கி இருந்தேன். இப்போது அது முடிந்து விட்டது. மீண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு கவுரமான தீர்வு கிடைக்கவுள்ளது. அதுவும் இராஜபக்சேயின் தயவால் கிழக்கு மாகாணத்தில் மாகாண சi பத்தேர்தல் மூலம் கிடைக்க இருக்கிறது. இதைத் தவறவிட்டால் எமது கவுரவம் பறி போய் விடும். அந்த இடத்தில் சிங்களவர்கள் வந்து விடுவார்கள் இராஜபக்சே கொடுக்கும் கவுரமான தீர்வும் இல்லாமல் போகும். ஏனென்றால் எனக்கு சாலை போடவும் ,தெருவைக் கூட்டிச் சுத்தம் செய்யவும், முடியாமல் போய் விடும். ஆகவே எனது சின்னமான சிரட்டையில் தங்கள் வாக்குகளை இட்டு அமோகமாக வெற்றி பெறச் செய்யுங்கள். சிரட்டையில் பாலும் குடிக்கலாம். கஞ்சியும் குடிக்கலாம், தேனீரும் குடிக்கலாம் சிரட்டை சூட்டைத் தாங்கும் கீழே விழுந்தாலும் உடையாது. இந்த தேர்தலை ஐநா சபை நடத்தும் வெகுமக்கள் வாக்கெடுப்பாக எண்ணி வாக்களியுங்கள்.
2. வேட்பாளர் கருணா: சின்னம் ரூபாய் நோட்டு
நானும் தமிழ் ஈழத்துக்கு எனது உயிரையும் பணையம் வைத்து போரடியவன்தான். எனது பெயர் உலகப் புகழ் பெற்றது. இருந்தாலும் பிராபாகரனை விட நான் சிறந்து போராட்ட வீரானாக இருந்தும் எனக்கும் எனது கிழக்கு மாகாண மக்களுக்கும் முக்கியத்துவம் தரவில்லை. அதனால் நான் பிரிந்து சிங்கள அரசுடன் சேர்ந்து நின்று பிராபாகரனை காட்டிக் கொடுத்தேன். நான் இப்போ நல்ல வசதி யுடனும் மந்திரி பதவியுடனும் கிழக்கு மாகாண மக்களுக்கு வசதியான வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளேன். எனது n மதகு சனாதிபதி மிகவும் நல்லவ ர். அவர் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களைத்தான் கொத்துக் குண்டுகள் போட்டு அழித்துள்ளார். ஆகn வ கடந்த காலங்களில் கிழக்கு மக்களுக்கு நான் செய்த அரிய சேவையை மறந்து விடாது என்னை வசதியாக வாழ வைத்த ரூபாய் நோட்டுச் சின்னத்தின் மேல் வாக்களித்து என்னையும் எனது சகாக்களையும் அமோகமாக வெற்றி பெறச் செய்து வசதி வாய்ப்புகளுடன் மேலும் வாழ வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
3. பணச்சின்னத்திற்காக பிரதம பிரச்சார பீரங்கி டக்தேவுக்கு வாக்களியுங்கள்:
நானும் ஈழப்போராட்டத்தில் முத்திரை பதித்தவன்தான், ஈழத்தில் சமத்துவ சமதர்ம சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கினேன்,இயக்கத்தை வழி நடத்தினேன். ஆனால் நான் என்னை சுய விமர்சனத்திற்காக உட்படுத்தி , அரசுடன் சேர்ந்து நின்றால்தான் இது சாத்தியம் என உணந்தேன். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஈழத்தில் மதத்தாலும் சாதியாலும் b பாருளாதாரத்திலும் அடக்கி வைக்கப்பட்ட மக்களை எல்லாம் ஒன்று திரட்டி முள்வேலி முகாமுக்குள் அடைத்து ,ஒரு சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிய ஒரு சிறந்த சோசலிசவ hதி என்றால் அது இராஜபக்சேதான். இதற்கு முன்னர், நான் மார்க்சையும் லெனினையும் தான் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டேன். ஆனால் இன்று ஆசானும் வழிகாட்டியும் தோழர் இராஜபக்சேதான். ஆம் இவர் கொத்துக்குண்டு போட்டு கொலை செய்தவர்தான் , கடும் கோபக்காரர்தான், ஆ னால் கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் . இந்த நல்ல குணத்தை உலகிற்கே புரிய வைத்தவர், அன்புத்தோழர் இராஜபக்சேதான். ஆகவே தமிழ் மக்களே ஒரு சோசலிச சமுதாயத்தை உலகுக்கு முன் மாதிரியாக உருவாக்கிக் காட்டிய இராஜபக்சேயின் கரத்தை வலுப்படுத்துங்கள்,தோழர்களே இன்றும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் தோழரின் தயவால் ஒரு தேர்தல் நடந்தால் ,வடமாகாண சபை முதல்வராக வர விரும்புகிறேன். எனது சின்னமான முள்ளுக்கம்பிச் சின்னத்தை மறந்து விடாது தங்கள் இதயத்தில் குத்திக் கொள்ளுங்கள் . வாழ்க சனநாயகம் ,வாழ்க முள்வேலி சமத்துவம் , எதிர்வரும் 8ம்தேதி செம்டெம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய முழக்கங்களை கேட்ட செய்தியாளர் இதைச் சுருக்கமாக வெளியுட்டுள்ளார்.
இவ்வண்ணம்
சவாரித் தாம்பர்