Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெள்ளத்தில் தமிழ்நாடு ஒரு பைசா கூட நிவாரணம் வழங்காத மோடி அரசு!

கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு தண்ணீரில் மிதக்கிறது. சென்னை கடுமையான வெள்ள சேதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாருர் என காவிரி டெல்வா மாவட்டங்களும்  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களும் கன மழைச் சேதங்களைச் சந்தித்திருக்கிறது.

இந்த பேரிடர் பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக்குழுவும் வந்து சென்று விட்டது. ஆனால் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஒரு ரூபாயைக் கூட ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியாக அளிக்கவில்லை. வரி வருவாயை ஒன்றிய அரசுக்குக் கொட்டிக் கொடுப்பது தமிழ்நாடுதான் இந்த வருவாயை எடுத்துதான் இந்தி பேசும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு செலவு செய்து வருகிறது.

கடந்த 24-ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த தமிழ்நாடு எம்.பி டி.ஆர். பாலு  பெருமழைப் பாதிப்புகளுக்கு ரூ. 2, 079 கோடி வேண்டும். முதல்கட்டமாக ரூ. 550 கோடியை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் மத்திய குழு ஆய்வுக்கு பிறகே தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்தியக்குழுவும் வந்து சென்று விட்டது. இந்த நிமிடம் வரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

கடந்த  10 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு மாநில அரசு கேட்ட நிதி, மத்திய அரசு ஒதுக்கிய நிதிக்கும் இடையே உள்ள வேறுபாடு இந்த கேள்வியை எழுப்புகிறது.

2018-ஆம் ஆண்டு கஜா புயல் பாதிப்பிற்கு தமிழ்நாடு அரசு கேட்ட  நிவாரண நிதி 14,910 கோடி ஆனால் மத்திய அரசு கொடுத்ததோ வெறும் 1,500 கோடி.2017- ஓகி புயல் பாதிப்பின் போது  தமிழ்நாடு அரசு  ரூ. 9, 302 கோடி கேட்டது, அப்போது மத்திய அரசு முதலில் ரூ. 133 கோடியும் தொடர்ந்து ரூ. 561 கோடியும் ஒதுக்கியது.வர்தா புயலின் போது ரூ 22, 573 கோடி கேட்கப்பட, கிடைத்ததோ ரூ. 266 கோடி.

2016 -17 ஆண்டில் கடும் வறட்சி நிலவியதால் ரூ. 39, 565 இழப்பீடு கேட்டது தமிழ்நாடு அரசு. ஆனால், ரூ. 1, 748 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.2011ஆம் ஆண்டு கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களை சிதைத்த தானே புயல் பாதிப்பிற்கு ரூ. 5, 249 கோடி நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால், ரூ. 500 கோடி தான் ஒதுக்கப்பட்டது.தானே முதல் நிவர், புரேவி புயல்கள் வரை மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையில் சுமார் 10 விழுக்காடு மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Exit mobile version