இவ்வாறு மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாக உருவாகும் போதெல்லாம் அதனை விரிவுபடுத்தி நாடுமுழுவதும் போராட்டங்கள் முன்னெடுப்பதனூடாகவே ராஜபக்ச குடும்ப பாசிசத்தைப் பலவீனப்படுத்த முடியும்.
ஆனால் பிழைப்புவாதக் கட்சிகள் மக்களுக்குப் போலியான நம்பிக்கைகளை வழங்கி அவர்களது போராட்டங்களை அழித்து கின்றன. போராட்டங்கள் உருவாகும் போதெல்லாம் சரவதேச அதிகாரவர்க்கங்கள் தீர்த்துவைக்கும் என்று மக்களை வீடுகளுக்குள் முடங்கியிருக்கக் கோருகிறார்கள்.வெலிவேரிய கொலைகளுக்கும் சரவதேச சுயாதீன விசாரணை தேவை என சுமந்திரன் நேற்றுக் கூறியிருந்தார்.
ஐக்கிய நாடுகல் மனித உரிமை ஆணைக்குழுவில் தலைவராகவிருக்கும் நவனீதம் பிள்ளை இலங்கை வருவதாகவும் அவர் வெலிவேரியக் கொலைகள் குறித்து விசாரணை நடத்தப் போவதாகவும் இன்று ஐக்கியதேசியக் கட்சி கூறுகிறது. மக்களுக்கு அன்னியர்கள் மீது நம்பிக்கை கொடுத்து அவர்களை தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவிடாது தடுக்கும் ஐ,தே.க வும் ஏனைய கட்சிகளும் மக்களுக்கு இனம்காட்டப்பட வேண்டும். வன்னிப் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள அண்மிக்கும் நிலையில் ‘சர்வதேசம்’ என்று இனவாதிகள் தாழ் வணங்கும் கொலைகாரக் கும்பல்கள் இதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.
வெலிவேரிய மக்களும் நாடுமுழுவதும் ராஜபக்ச அரச பயங்கரவாதத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போது ‘சர்வதேசத்தை’ நம்பியிருந்தால் மேலும் மேலும் சூறையாடப்படுவார்கள். இலங்கை முழுவதும் எழுச்சியி ஏற்படுத்தி குறைந்தபட்சம் போராடும் உரிமையை மீட்டெடுக்கவாவது மக்கள் போராடியே ஆகவேண்டும்.