Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெண்மணி தியாகிகள்- எஸ் ஜி எம் லெனின்

அனைவருக்கும் வணக்கம்

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு பல தடைகளையும் சிறை வாசமும் எண்ணற்ற தோழர்களின் உயிர் தியாகமும் செய்திருக்கிறார்கள்….

அவர்களையெல்லாம் இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்வதற்க்கும் ஏதுவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா மலராக தோழர் எஸ் ஜி முருகையன் அவர்களின் முயற்சியில் தொகுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் வாழ்க்கை சரித்திரம் அவர்கள் பட்ட கஷ்டங்களை கண்முன்னே நிறுத்தும் அந்த

கம்யூனிச காவியம் ……

தஞ்சை மண்ணில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்டுகள் 1975 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது ….

அந்தச் சிறு வெளியீட்டில் வெண்மணி தியாகிகள் பற்றியும் 40க்கு மேற்பட்ட பொதுவுடமைப் போராளிகளின் தியாக வரலாற்றைப் பற்றியும் …….

எஸ் ஜி முருகையன் அவர்களின் எண்ண ஓட்டத்தில் பதிவான பதிவுகளும் தொகுத்து வழங்கியிருக்கிறார் ……

தோழர் எஸ்.ஜி.முருகையன் வெண்மணி படுகொலை சம்பவம் நடந்த அந்த நேரத்தில் அங்கு சென்றபோது நடந்த நிகழ்வுகளை உங்கள் பார்வைக்காக இதோ

வெண்மணி கிராமத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் துடித்துப் போன பொதுவுடமை தோழர்கள் எல்லாம் புறப்பட்டு வெண்மணி நோக்கி படையெடுத்தனர் …..

அப்படி படையெடுத்த தோழர்களில்

எஸ் ஜி முருகையனும் ஒருவர் …

அவர் அப்பொழுது கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தார் தியாகத் தோழர் ஏ.எம் .கோபு அவர்களை அழைத்துக்கொண்டு இன்னும் மற்ற தோழர்களோடு வெண்மணிக்கு புறப்பட்டு செல்கிறார்கள் தோழர்கள்….

கீழ்வேளூரை ஐ தாண்டி வெண்மணி நெருங்கும் பொழுது போலீஸ் படை இவர்கள் சென்ற ஜீப்பை வழிமறித்து 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது இங்கு யாரும் செல்ல அனுமதி கிடையாது என்று வழிமறிக்கிறபோலீஸ் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத

தோழர் எஸ் ஜி முருகையன் கோபத்தோடு ஜீப்பில் இருந்து கீழே இறங்கி

ஏன் மக்களை கொன்னுட்டு யாருக்குடா பாதுகாப்பு கொடுக்குறீங்க……

என்று கண்களிலிருந்து நீர் வடிய கோபப்பட்டு ஆக்ரோசமாக கத்துகிறார் வந்திருப்பது யார் என்று தெரியாமல் போலீஸ் திணறுகிறது…ஜீப்பில் இருந்த ஏ.எம். கோபு இறங்கி வந்து எஸ் ஜி எம் அவர்களை சமாதானம் செய்துவிட்டு போலீசிடம் நிலவரத்தை சொல்கிறார் நாங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடைய தலைவர்கள் நாங்கள் அங்கு செல்ல வேண்டும் என்று கூற காவல்துறை எஸ் ஜி முருகையன் வந்த அந்த ஜீப்பை வெண்மணிக்கு செல்ல அனுமதிக்கிறது வெண்மணிக்கு சென்ற தலைவர்கள் அங்கிருந்த மக்களெல்லாம் வந்த தலைவர்களையும் உறவினர்களைப் பார்த்து கதறுகிறார்கள்…..

அவர்களுக்கு இவர்களால் என்ன வார்த்தை சொல்வதென்றே தெரியவில்லை எப்படி ஆறுதல் கூற முடியும் என்று

பதறுகிறார்கள் ……

துடிக்கிறார்கள் …..

கண்களில் நீர் வடிய ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த வேளையில்

பலியான உயிர்கள் எத்தனை என்றுதவறாக கணக்கிடப்பட்டு முடிக்கிறது காவல்துறை அங்கு வந்த பொதுவுடைமை தோழர்கள் குழந்தைகளை சேர்த்து 44 உயிர்கள் என்று கணக்கிட்டு முடித்தார்கள் அந்த சோக காவியத்தை இன்று நினைத்தாலும் நம் நெஞ்சமெல்லாம் பதறுகின்றது அந்த

சோக காவியத்தை …..

வீர வரலாற்றை…….

தோழர் எஸ் ஜி முருகையன் எழுதிய சில பதிவுகளை மட்டும் இங்கே உங்களின் பார்வைக்காக ………

செந்தனலில் பூத்து விட்ட வெண்மணியில் செம்மலர்கள் ….

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்ற பாட்டை ஒலிக்கும் பாரத தேசத்திலே,பாரதத்தாய் அதில் நீரதன் என்று வாய்கிழியப் பேசும் இந்திய மண்ணிலேதனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்என்று பாடிய பிறந்த மண்ணிலேஎல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றுபொன்மொழிகளை கொட்டிவிடும் பூமியிலேமுல்லைக்குத் தேரையும் புறாவுக்காக தன்னுடைய தசையும் தானம் இட்ட பாரியும் சிபியும் வாழ்ந்த இந்த நாட்டிலே மனுநீதி மன்னனும் பொற்கைப் பாண்டியன் ஆட்சி புரிந்த தமிழகத்திலே நண்டு குஞ்சுகளும் நத்தை ஓடுதலும்அரிஜன குழந்தைகளின் வைரமுத்தாரங்கள் என்று கூறி தாழ்த்தப்பட்ட வர்க்கத்தின் சீரழித்த வாழ்க்கைத்தரத்தை சுட்டிக்காட்டி நீலிக்கண்ணீர் வடிக்கும் போலிகள்ஆளும் தமிழகத்திலே …..

அந்தோ கொடுமை!

கொடுமையோ கொடுமை! !

கருப்பர்களை அடிமைகளாக்கி கொம்பில்லா மாடுகளாய்பிணைத்து உழைப்பு கருவியாக சந்தையில் விற்பனை செய்யும் தென்னாப்பிரிக்காவில் கூட இது போன்ற நீசச் செயல் கேட்டதில்லை

உலகத்தில் எந்த மூலையிலும் இது போன்ற ஒரு கொடுமை இழைக்கப்பட்டு இருப்பதாகப் பார்த்ததுமில்லை …காதால் கேட்டதும் இல்லை .எந்த வரலாற்றிலும் கண்டதில்லை.அப்படிப்பட்ட கொடுமையை நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் பார்த்திருக்கிறோம் என்றால் அது நஞ்சையும் புஞ்சையும் நெற்கதிர்களும் சாய்ந்து தென்றலுடன் சிந்திசைப்பாடும் தஞ்சை தரணியிலே நாகை தாலுக்காவில் கீழவெண்மணி கிராமத்தில் தான் நடந்த சோக காவியம் அது இந்த பாருக்கெல்லாம் படியளக்கும் பஞ்சை பவுதியாகிய பரமசிவனின் பிள்ளைகளாகிய கீழவெண்மணி அரிஜன மக்களுக்கு இழைக்கப்பட்ட நெஞ்சை உருக்கும் சோக காவியம் தான் அது…..

தஞ்சை மாவட்ட நெல் உற்பத்தியாளர் சங்க தலைவன் அவனுக்கோ பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது அவன் ஒரு பெரிய நிலப்பிரபு.

அவன் அந்தப் பகுதியில் உள்ள ஏழை ஹரிஜன விவசாயக் கூலித் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுத்தவன் .ஜீவிப்பதற்கு இந்த சுதந்திர நாட்டில் கையையும் காலையும் தவிர வேறு எந்த உத்திரவாதமும் இல்லாத அரிஜன ஏழை மக்களை கொடுமையான நெருக்கடி கொடுத்து வந்தான்

ஆட்பெரும் படையுடன்மணிமுடி தர்பார் நடத்திவந்தான்அந்தப் பகுதி விவசாயத் தொழிலாளர்களை நெல் உற்பத்தியாளர் சங்கத்தில்சேரும்படி நிர்ப்பந்தித்தான்.ஆனால் அரிஜனங்கள் நாங்கள் எல்லோரும் செங்கொடி சங்கத்தில் இருக்கின்றோம் அதனால் இந்த சங்கத்தில் சேர முடியாது என்று கூறிவிட்டார்கள் அந்த சமயத்தில்அறுவடை நெருங்குகிறது அதே நேரத்தில் ஊர் மெச்ச கூறும் உழவன் திருகாழும் நெருங்குகிறது .

கண்ணெதிரே தன் உழைப்பின் பலன் எல்லாம் செங்கதிர்களாய் குலுங்குவதை பார்க்கிறான்.

அந்த அந்த ஹரிஜன தொழிலாளி ஆனால் அவையெல்லாம் அவனுக்குப் போய் சேராது. விலைவாசியை கட்டுக்கடங்காமல் ஏறிவிட்டது.

வாழ்க்கையோ நடத்த முடியவில்லை

.அறுவடையும் ஆரம்பித்துவிட்டது அரைப்படி கூலி அதிகம் கேட்டார்கள் அந்த விவசாய தொழிலாளர்கள் இதுதான் அவர்கள் செய்தகுற்றம் இதை அறிந்த கொடியவன் மிராசுதார் சங்கத்தலைவன் அப்பகுதியில் உள்ள மிராசுதாரர்கள் அனைவரையும் சந்தித்து நாம் முன்பு கொடுத்துவந்தஅறுவடைக் கூலியை இந்த ஆண்டுகுறைத்து விட வேண்டும் நாம் நிர்ணயிக்கின்ற கூலிக்கு சம்மதிக்கவில்லை என்றால் அறுவடைக்கான ஆட்களை வெளியூர்களில் இருந்து கொண்டு வருகிறேன் என்று மிராசுதார்களுக்குதுணிவையூட்டி அதுபோல் வெளியூர் ஆட்களை இறக்கி அறுவடை செய்தனர்.இந்தக் குறைந்த கூலி முடிவையும் வெளியாட்கள் வருவதையும் அறிந்த அரிஜன மக்கள் அதை எதிர்க்கிறார்கள்.

இப்படி கட்டுப்பாடாக எதிர்ப்பதற்கு காரணமானவர்கள் ஆக செயல்பட்ட முக்கிய ஊழியர்களை முதலில் தீர்த்துக்கட்ட நிலப்பிரபுக்களும் அதன் தானைத் தலைவனும் திட்டம் தீட்டவிட்டார்கள். நாளும் வைத்துவிட்டார்கள் ….

அந்த நாள்தான் 25-12-1968 அந்தத் தேதியில் கில்லுகுடி ராஜகோபாலத் கோனார் வயலில் வெளியூர் ஆட்களை வைத்து அறுவடை செய்துவிட்டு மிராசுதார் சங்க தலைவனும் அவன் தலைமையில் வயிற்று சோற்றுக்கும், ஒரு மொந்தைக் கள்ளுக்கும் கடித்துஉதர வந்த கூலி நாய்களும், குண்டர்களும், அரிவாலும் ,கம்பும், மற்றும் கொடிய ஆயுதங்களுடன் மாலை 5 மணிக்கு வெண்மணியின் ரோட்டின் வழியாக

வருகிறார்கள் ரோட்டில் கடை வைத்திருந்த ஹரிஜன தோழர் முத்துசாமி என்பவரை கடைக்குள் புகுந்து அடித்து இழுத்தார்கள் அவரது கடைக்கு எதிரே நின்ற தோழர்கள் முனியன் சீனிவாசன் ஆகியோர்களை கண்டபடி அடித்து இழுத்துக் கொண்டு போய் வெண்மணி நாயுடு வீட்டில் கட்டிப் போட்டார்கள் ..

இந்த கொடுமை அறிந்த அரிஜன மக்கள் அனைவரும் திரண்டு போய் நீதி கேட்க சென்றார்கள் அவ்வளவுதான் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த பழிகார நிலபிரபும்அவனது ஆட்களும் நமது தோழர்கள் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டார்கள்.தடிகொண்டு தாக்கினார்கள்,

ஈட்டியால் குத்தினார்கள் அரிவாளால் வெட்டினார்கள் நிராயுதபாணியான அந்த மக்கள் அந்தத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்கள் தெருவை நோக்கி ஓடினார்கள் பயந்து ..

ஓடுகிற மக்களை அந்த அப்பாவிகள் விடவில்லை துரத்திக்கொண்டே ஹரிஜன தெருவிற்குள் ஓடுகிறார்கள் திடமானவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள் முடியாத வயோதிகர்கள் பெண்கள் சின்னஞ் சிறுவர்கள் அனைவரும் மிச்சம் அந்த ஈவு இரக்கமற்ற ரத்தவெறி பிடித்த கூட்டம் பட்டினியாலும் பசியாலும் வறுமைப் பிடியில் சிக்கிஎலும்பும் தோலுமாய் பட்டினி பெருமூச்சும்பஞ்சடைந்த கண்களும் உழைத்துக் களைத்த அந்த மக்களை சுற்றி வளைத்தார்கள் சுட்டார்கள் ஈட்டியால் குத்தினார்கள் அரிவாளால் வெட்டினார்கள் அதிலும் அகப்படாமல் 8 அளவுள்ள ஓல குடிசைக்குள் நுழைந்திருந்த இடத்திற்கு தாக்கப்பட்ட அந்த வயோதிகர்களையும் குழந்தைகளையும் பெண்களையும் அந்த குடிசை மீது வீசுகின்றது உயிருடன் சிலர் குடிசைக்குள் தாங்கள் தப்பித்து விட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கும் அந்த அப்பாவிகளுடன் .

அந்த கலியுக நரகாசூரன் மிராசுதாரர்கள் சங்க தலைவன் பெட்ரோல் ஊற்றி தீ மூட்டி விட்டான்

அந்தத் தீயவன்.

நான்கு பக்கமும் அந்த துச்சாதனனின் ஆட்கள் நிற்கிறார்கள்.

யாரும் தப்பித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள தீயின் உக்கிரம் பொறுக்கமுடியாமல் முண்டிக் கொண்டு வெளியே வரும் அந்த பச்சிளம் பிள்ளைகளை குத்தீட்டியால் குத்திதள்ளுகிறார்கள். யாரும் தப்பிக்க முடியவில்லை.ஊருக்கெல்லாம் உழைத்து ஊனத்தை கொடுத்து விட்டு தன்னுயிர் நிலையும் குறைத்துக்கொண்டு உயர்ந்த ஆடையும், அணிகலன்களையும், அறுசுவை உணவையும் ஒருநாள் கூட அனுபவிக்க முடியாமல் எண்ணற்ற ஆசைகளை இதயத்திலே வைத்து பெருமூச்சு விட்டபடியே பசியாலும் பட்டினியாலும் வறுமையாலும் கழித்து இடுகாடு செல்லும் காலத்தை எதிர்பார்த்து வயோதிகர்களை 7 பேர் காலை முதல் மாலை வரை இடுப்பொடிய குனிந்து நடவு நடும் பெண்கள் செந்தணலால் சுட்டெறிக்கபட்டு சூரிய வெப்பத்தால் கொப்பளிக்க பட்ட கொப்புளங்களை வைரம் பதித்த ஒட்டியானமாய் ஏற்று உழைக்காத வர்க்கத்திற்கு எல்லாம் உடலில் மெருகேற்ற தன்னுடைய உழைப்பை தானமிட்டு ,உளி கொண்டு வடிக்காத உயிர் சிலை ஒன்றும் மை கொண்டு தீட்டாத உயிரோவியம் என்றும் கவிஞனுக்கு கற்பனை ஊற்றுபீரிடும் அற்புத அழகிகளையெல்லாம் தன் உழைப்பால் உருவாக்கிவிட்டுதான் மட்டும் உருக்குலைந்து காய்ந்த சருகாய் போனவர்கள்.

அதிலும் பூப்படைந்து எதிர்கால வரனை வேண்டி,

தன் திருமணத்தில் ஒலிக்கப் போகும் மேள தளங்களையும் சீர்வரிசைகளையும் எண்ணி பூரிப்பு அடைந்தவர்கள் எதிர்காலத்தில் தன் வாழ்நாள் பூராவும்

உழைத்துப் போட கொதி தண்ணியும் குருணைகஞ்சியும் குடித்து தன்னை தயாராகிக்கொண்டிருந்த சிறுவர்களையும் சேர்த்து 44 பேர்களையும் அந்த எட்டடி குடிசைக்குள் தள்ளி எரிக்கிறார்கள் தீ எரிகிறது தீயின் சுவாலையும் புகையும் உயிருக்குப் பயந்து ஓடிக் கொண்டிருந்த அந்த உழைப்பாளி மக்களின் நாசோட்டத்தில் கலந்தது ஒருவரை ஒருவர் எரியும் தணலிலே எறிந்து விட்டார்கள் இத்துடன் ஒரு சோக காவியம் அரங்கேறி முடிந்துவிட்டது அச்ஜீவன்களின் அபாயக் குரல் ஓய்ந்துவிட்டது சுரண்டும் வர்க்கத்தின் வர்க்க வெறியை தத்துவமாக்கி விட்ட தத்ரூப கோரக் காட்சி முடிவுற்றது இந்தக் கொடுமை அழிக்கமுடியாத வரலாறாகி விட்டது இத்தனைக்கும் இன்று ஆட்சியில் இருக்கின்ற ஆளும் வர்க்கம் உண்மையான சேவையை செய்துவிட்டது உடமை வர்க்கத்தின் தளபதியை காவந்து செய்து விட்டது இந்தக் கொடுமையை அறிந்து எழுச்சியுற்ற மக்கள் வெள்ளத்திடமிருந்து அந்த மிராசுதார் சங்க தலைவனை பாதுகாக்க. போலீஸ் அவன் மீது குற்றம் சாட்டி கைது செய்து பாதுகாப்பாக வைத்தது என்னே அநியாயம் ?????

கன்றைதேரை விட்டுக் கொண்டு விட்டான் என்பதற்காக தாய்மாடே ஆராய்ச்சி மணியை அடித்துஅரசவையை கூடியதாம் இதைக்கண்ட மன்னன் தன் மகனையே தேரை விட்டு அரைத்துக் கொன்றானாம்!!

என்று அடிமை வர்க்கம் ஆளும் வர்க்கத்திடம் முரண்பாடு இல்லாமல் சுரண்டப் படவேண்டும் என்பதற்காக மடத்தனமாக கதை கட்டி விட்டதைநாள்தோறும் புகழும் சுத்த தமிழர்கள் செங்கோல் ஒச்சும் சிறப்புமிகும் செந்தமிழ் நாட்டிலே தான் இந்த கொடுமை நடந்துள்ளது

.எங்கே நீதி……

ஒடுக்குமுறைக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்து விட்ட அந்த கொடியவனுக்கு என்ன தண்டனை கிடைத்தது ?????

நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது????

மிராசுதார் சங்க தலைவன் உயர் குடும்பத்தில் பிறந்தவனாம் அவன் தீப்பந்தம் கொழுத்தி தன் கையால் அந்த

கீழ்த்தரமான காரியத்தை செய்ய மாட்டானாம் ஆகவே அவன் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்ததாம்

ஒன்றுமறியாத எங்களைக் கொன்று குவித்து விட்டு கும்மாளம் அடிக்கும் உலுத்தர் கூட்டமே நீங்கள் தப்பித்து விட்டோம் என்று நினைக்காதீர்கள் உங்களை எங்கள் சகோதரர்கள் ஒழித்துக் கட்டிய ஆவார்கள் என்று அந்த மறைந்த உள்ளங்கள் பேசுகிறது செந்தமிழில் வெந்துவிட்டவெண்மணி தியாகிகள் பேசுகிறார்கள்

வாழ்க அந்த தியாகிகள் நாமம் ……

வெண்மணி தியாகிகள் ….

பாலகர்கள் (சிறுவர்கள்)

1 குமாரசாமி வயது 5

2 நடராசன் வயது 6

3 ராஜேந்திரன் வயது 7

4 தங்கையன் வயது 5

5 நடராசன் வயது 5

பெண் குழந்தைகள்

1 வாசுகி வயது 3

2 செல்வி வயது 3

3 ஜெயம் வயது 6

4 வாசுகி வயது 5

5 ராணி வயது 8

6 வேதவல்லி வயது 10

7 ஆச்சியம்மாள் வயது 10

8 ஜோதி வயது 10

9. ஜெயம் வயது 10

ஆண்கள்

1. பா சுப்பன் வயது 70

2 ஆசைத்தம்பி வயது 10

3 கருணாநிதி வயது 12

4. தாமோதரன் வயது 12

5 குருசாமி வயது 15

6 சண்முகம் வயது 13

7 முருகன் வயது 40

8. சேது வயது 26

9. சீனிவாசன் வயது 30

பெண்கள்

1 குப்பம்மாள் வயது 60

2 கருப்பாயி வயது 50

3 காவேரி வயது 50

4. அஞ்சலை வயது 45

5. பட்டு வயது 46

6. சுந்தரம் வயது 45

7. பாப்பா வயது 25

8 சரோஜா வயது 12

9 சந்திரா வயது 12

10. மருதம்மாள் வயது 25

11 சின்னப்பிள்ளை வயது 25

12.குஞ்சம்மாள் வயது 30

13 பூரணமயில் வயது 16

14 கருப்பாயி வயது 35

15 ராஞ்சியம்மாள் வயது 16

16 கண்ணம்மாள் வயது 25

17 பாக்கியம் வயது 35

18 வீரம்மாள் வயது 22

19.ஆச்சியம்மாள் வயது 30

20 ஆண்டாள் வயது 12

21 பாக்கியம் வயது 35

வாழ்க வெண்மணி தியாகிகள்!

Exit mobile version