உண்மையில் நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் முதலில் டெல்லியிலுள்ள பார்ப்பன அரசை நீக்கி விட்டு அங்கே சூத்திரர்களின் அரசை அமைக்க வேண்டும். அவ்வாறு பார்ப்பன அரசை நீக்கி விட்டு, சூத்திரர்களின் அரசை அமைப்பதற்கான வேலைகளைச் செய்யாமல் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதாக் கூறினாலும் சாரி; இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகக் கூறினாலும் சாரி; அது அறியாமையாகவோ அல்லது அயோக்கியத்தனமாகவோ தான் இருக்க முடியும்.
காஷ்மீர் மக்கள் தங்களுடைய சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுவதை அம்மாநிலத்து பண்டிட்டுகள் எனப்படும் பார்ப்பனர்கள் விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் பண்டிட்டுகள் தான் காஷ்மீர் மக்களை ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆகவே மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களால் காஷ்மீர் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காஷ்மீரை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தும் இருக்கிறார்கள்.
இந்தப் பண்டிட்டுகள் இருக்கிறார்களே இவர்கள் காஷ்மீரத்தில் ஈழத் தமிழர்களைப் போலப் பதுங்கு குழிகளிலா வாழ்கிறார்கள்? மற்ற மக்களின் வாழ்விட வசதியை விட இவர்களுடைய வாழ்விட வசதிகளில் ஏதாவது குறை உள்ளதா? அப்படியெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. சாரி! இடம் பெயர்ந்த பண்டிட்டுகளின் நிலை எப்படி இருக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்வி நிலையங்களில் (கவனமாகப் பாருங்கள் ஆரம்பக் கல்வியில் அல்ல; உயர்கல்வியில்) போதுமான (?!) பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தினார்கள்.
அதாவது புலம் பெயர் வாழ்க்கையிலும் அவர்களுடைய வசதிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் அமைதிக் கால வாழ்க்கை வசதியை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
‘இமய மலையில் இருக்கும் பார்ப்பானுக்குத் தேள் கொட்டிளால் கன்னியாகுமாரியில் உள்ள பார்ப்பானுக்கு நெறி கட்டும்’ என்பார்கள். அதுவே தவறு என்று தோன்றுகிறது. இமயமலையிலுள்ள பார்ப்பனன் தேளைப் பார்த்தாலே கன்னியாகுமாரியிலுள்ள பார்ப்பனனுக்கு நெறி கட்டுகிறது. நம் நாட்டு மக்களின் சராசாரி வாழ்க்கைத் தரத்தை விடப் பல மடங்கு அதிக வசதியடன் வாழும் புலம் பெயர் பண்டிட்டுகள் படும் வேதகைளைப் புரிந்து (?!) கொள்ள வேண்டும் என்று தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் 24-4-20011 அன்று சென்னையில் அதற்கென ஒரு கருத்தரங்கை நடத்தி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் காஷ்மீர் பண்டிட்டுகளின் துயரங்களை இப்போதைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளவே இல்லை என்றும் இது ஏதோ நாட்டின் வட கோடியில் நடக்கும் பிரச்சினை என்று நினைக்காமல் நம்முடைய பிரச்சினையாக நினைத்துக் கொண்டு காஷ்மீர் பண்டிட்டுகளின் துயரங்களைத் தீர்க்க முனைய வேணடும் என்றும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
நிச்சயமாகத் தோல்வி என்ற பாதையில் வீர வசனம் பேசிக் கொண்டு செல்கிறோம். பார்ப்பனர்கள் அமைதியாகத் தங்கள் நலன்களை அரசதிகாரத்தைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவே தன் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்த பொரியாரின் சாரியான கணிப்பைக் கணக்கிலேயே கொள்ளாமல் நாம் குருட்டுப் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் பார்ப்பன ஆதிக்க அரசை ஆணி வேர், பக்க வேர், சல்லி வேருடன் பெயர்த்து எறிந்து விட்டு அங்கே சூத்திரர்களின் அரசை நிறுவாத வரையிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசுவதற்கு, இந்தியத் தமிழர்களுக்கு அருகதை இல்லை.
ஈழத் தமிழர்களின் மீது உண்மையில் அக்கறை இருக்குமானால், முதலில் டெல்லியில் உள்ள பார்ப்பன அரசைக் கெல்லி எறிந்து, அங்கே சூத்திரர்களின் அரசை அமைக்க முன் வாருங்கள்.