Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகள் முற்றுகை-ஜனவரி 26 டெல்லி என்னவாகும்?

????????????????????????????????????

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கடுங்குளிரில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்து விட்ட நிலையில் டெல்லியில் நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு டிராக்டர் பேரணியை நடத்துவதில் விவசாயிகள் திவீரம் காட்டுகிறார்கள். ஆனால், இந்த பேரணியில் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில்  ஆயுத தாரிகள் புகுந்து எப்படி வன்முறையை உருவாக்கினார்களோ அப்படி இந்த போராட்டத்திலும் வன்முறை வெடிக்கலாம் என்ற சந்தேகம் விவசாயிகளிடம் உள்ளதால். முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இன்னொரு பக்கம் டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு என போலீஸ் அதிகரம் கிடையாது. மத்திய உள்துறையின் கீழ்தான் போலீஸ் அதிகாரம் உள்ளது.  இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கியிருந்தாலும் குடியரசு தின கொண்டாட்டங்களை பாதிக்காத வண்ணம் பேரணி நடத்த வேண்டும் என்கிறார்கள்.ஆனால், பஞ்சாப் விவசாய சங்கத்தைச் சேர்ந்த சத்னம் சிங்  பன்னு இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது,

“இந்த பேரணி தொடர்பாக போலீசார் எங்களுக்கு அனுமதி கொடுக்கிறார்களா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் டெல்லி வெளியில் போராட்டத்தை நடத்துவதில் திவீரமாக உள்ளோம்” என்றார்.

டிராக்டர் பேரணி திக்ரி, சிங்கு , காஜிப்பூர் எல்லைகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும்  மூன்று முனைகளில் இருந்தும் டெல்லிக்கு நுழைய விவசாயிகள் திட்டமிட்டுள்ளதால் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட பல முக்கிய இடங்களை மூட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இன்னொரு பக்கம் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் விவசாயிகள் பேரணியாகச் சென்று இந்த டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்பதால் லட்சக்கணக்கில் விவாசாயிகள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version