Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகள் மீது மோடி அரசு ஒரு முழுமையான போரை நடத்துகிறது!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் பெரும் போராட்டங்களை தீவிரமாக்கி வருகிறார்கள். வழக்கமாக இந்து மத எழுச்சி, ராமர் கோவில் உயர்சாதி இந்து ஆதிக்கம் என பாஜகவின் அரசியல் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

ராமர்கோவிலை வைத்து இந்து வெறியையூட்டித்தான் இதுவரை தனியார் கார்ப்பரேட் திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வந்துள்ளது. இந்துத்துவத்தின் மீது கட்டப்படும் ராமர்கோவில்தான் கார்ப்பரேட் தனியார் பொருளாதாரம் என்பதை இத்தனை நாள் புரிந்து கொள்ளாத வட இந்திய விவசாயிகள் இப்போது புரிந்து கொண்டு போராடுகிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களுக்கும் மேலாக நடந்த  போராட்டம் நடந்து முடிந்த குடியரசு தினத்தன்று உச்சத்தை அடைந்தது. அப்போராட்டத்தின் முடிவில் நூற்றுக்கணக்கான விவசாயிகளைக் காணவில்லை என்று விவசாய சங்கங்கள் புகார் கூறியுள்ள நிலையில்.

டெல்லி எல்லையான் சிங்கு, காசிப்பூரை நோக்கி மேலும் விவசாயிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்பகுதிகளில் தண்ணீர், மின்சாரம், இணைய சேவை, செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் இரும்பு ஆணிகளால் ஆனா தடுப்பு வேலிகளை அமைத்து வருகிறது அரசு. மேலும் காவல்துறைக்கு இரும்பு லத்திகளையும் கொடுத்துள்ளார்கள். இந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் சீன ராணுவத்தினர் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினரை இதே பொன்ற இரும்பு கிராதிகளால்தான் தாக்கி கொன்றார்கள். ஆனால், அது பற்றி மவுனம் காக்கும் மோடி அரசு சொந்த நாட்டில் உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை ஒடுக்க கொடூரமான ஆயுதங்களை உருவாக்கி  வருவது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

Exit mobile version