Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகள் போராட்டம் 22 வயது செயற்பாட்டாளர் கைது!

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் தன்னார்வலர் திஷா ரவியை பெங்களூருக்குள் நுழைந்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். திஷா ரவி கைது செய்யப்பட்டது அவர் கைது செய்யப்படும் வரை பெங்களூரு போலீசுக்கோ, கர்நாடக மாநில அரசுக்கோ தெரியாது. பத்திரிகையாளர்கல், சமூக செயற்பாட்டாளர்கள் கைதை தொடர்ந்து திஷா ரவியின் கைதும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி உட்பட வட மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் உலகம் முழுக்க பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் போராட்டம் தொடர்பான டூல் கிட்டை ட்விட்டரில் பகிர்ந்ததுதான் திஷா ரவி செய்த குற்றம் என்கிறது போலீஸ்.

டூல் கிட் என்பது ஒரு போராட்டம் அல்லது செயற்திட்டம் தொடர்பான விரிவான பிரவுசர். இணையத்தில் பகிர்வதற்கான வேளாண் போராட்டம் தொடர்பான டூல் கிட் ஒன்றை சமுக செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து உருவாக்கினார்கள். அதில் ஏன் இந்த விவசாயிகள் போராட்டம் , எங்கு எப்படி நடக்கிறது. ட்விட்டரின் என்ன என்ன ஹேஷ் டேகுகளை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற முழு விபரங்களும் அந்த டூல் கிட்டில் இருக்கும். இந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்தை தெரிவித்திருந்தார் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன் பெர்க்.

இதே டூல் கிட்டைபெங்களூரு சுற்றுச் சூழல் ஆர்வலர் திஷா ரவியும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில்தான் ரகசியாமாக பெங்களூரு வந்த டெல்லி சைபர் கிரைம் போலீசார் அவரது வீட்டை நோட்டமிட்டு அவரைகைது செய்துள்ளார்கள். இரண்டு பெண் போலீசார் உட்பட ஐந்து போலீசார் நேற்று பிப்ரவரி 14-ஆம் தேதி மதியம் 12 மணியளவில் பெங்களூர் வந்து நேராக திஷா ரவி வீடு அமைந்துள்ள பகுதிக்குச் சென்று திஷாவின் வீட்டை நோட்டமிட்டு அவரது மொபைல் போனை டிரேஸ் செய்து அவர் வீட்டிற்குள் இருக்கிறாரா என்பதையும் சோதித்துக் கொண்டனர். பின்னர் அவரைகைது செய்து விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவருக்காக எந்த ஒரு வழக்கறிஞரும் நியமிக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்பே அவருக்கு வழங்கப்படவில்லை.இப்போது திஷா ரவியை போலீசார் விசாரிக்க ஐந்து நாள் போலீஸ் காவலில் அனுப்பியிருக்கிறது நீதிமன்றம்.

திஷா ரவியின் கைது அவருக்கு வழக்கறிஞர் வைத்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது. அவரை கேள்விக்கிடமின்றி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பியமை என திஷா ரவியின் கைது கருத்துரிமை மீதான மிக மோசமான தாக்குதல் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Exit mobile version