Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தொடரும்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க விவாசாயிகள் போராடி வந்தனர். அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல்களில் தோற்று விடுவோமோ என்று அஞ்சி மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் கைவிடுகிறோம் என்று அறிவித்தது.

ஆனால், இன்றுடன் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு அடைவதையொட்டி தங்கள் முடிவை இன்று அறிவிக்கிறோம் என்று விவசாயிகள் அறிவித்திருந்தார்கள். அதன் படி டெல்லியில் பல விவசாயிகள் சங்கங்கள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டன. முக்கிய விவசாய சங்க தலைவர்களான ராகேஷ் திகாயத், குர்நாம் சிங் போன்றோர் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டம் நடைபெறும் போதே விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என மோடி அரசு அறிவித்தது. அதன் பின்னர் தங்கள் முடிவுகளை போராட்டக்குழு சார்பில் குர்நாம் சிங் அறிவித்தார். அவ்வறிவிப்பில், “விவசாயிகளின் தரப்பின் என்னென்ன கோரிக்கைகள் வைத்தோமோ அந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும், விளைபொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலைக்கான சட்ட உத்திரவாதம் தேவை. மேலும் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அரசு அறிவித்துள்ளது.அது எப்போது வாபஸ் பெறுவார்கள் என்று தெரியவில்லை எனவே போராட்டங்களை இப்போது கைவிடும் சூழல் இல்லைபோராட்டம் தொடரும் என குர்நாம் சிங் அறிவித்துள்ளார்.இது மோடி அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Exit mobile version