Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகள் நாடாளுமன்ற முற்றுகை ஒத்திவைப்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக  விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டம் காரணமாக மோடி அரசு மூன்று சட்டங்களையும் விலக்கிக்கொண்ட நிலையில்  போராட்டங்களை விவசாயிகள் கைவிட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், அரசின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கடந்த 24 ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா-2021-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த மசோதா வரும் 29-ந் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கலாகிறது.

இது குறித்து பேட்டி அளித்த மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ‘மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றம் கூடும் அன்று டிராக்டர் முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் அறிவித்திருந்தனர். அந்த போராட்டம் இப்போது விலக்கி கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள் மேற்கொண்டு என்ன மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்பது பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

Exit mobile version