Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகள் கொலை- மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்பு அறிவிப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி படுகொலை செய்த விவகாரத்தைக் கண்டித்து அக்டோபர் 11-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்ப்ட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் இரு கட்சிகளும் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதனிடையே லகிம்பூர் கேரி மாவட்டத்திற்கு ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி இருவரும் சென்றுள்ள நிலையில் அங்கு முழுமையாக இணையம் துண்டிக்கப்பட்டுள்ளதால்  அங்குள்ள தகவல்கள் எதுவும் வெளியுலகிற்கு தெரியவரவில்லை.

Exit mobile version