Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகளிடம் தோற்கும் பாஜக!

இந்தியாவில் பல தேசிய எழுச்சிகள் காணப்பட்ட போதும் அவைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பின்னடைவைச் சந்தித்தே வந்திருக்கிறது. இந்து தேசிய எழுச்சி மட்டும் பிற தேசிய இன முரண்களை உண்டு செறித்து வளர்ந்து வந்திருக்கிறது. மோடியின் ஆட்சியில் அது உச்சம் பெற்று வந்துள்ளது. ஆனால், இது நீடித்திருக்குமா என்ற கேள்வி இப்போது பாஜகவுக்குள் எழுந்திருக்கிறது. இந்துத்துவ வலதுசாரிகளின் தேசிய எழுச்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைதல் காங்கிரஸ் தன் பலவீனங்களை களைந்து விட்டு நாடு தழுவிய இயக்கத்தை கட்டி எழுப்புதல் போன்ற விஷயங்களைச் செய்தால் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதையே அனுபவம் உணர்த்துறது.

13 மாநிலங்களில்  மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் 29 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக  தோல்வியைத் தழுவியுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தைத் தவிற பிற மாநிலங்களில் அது தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி நம்பிக்கைக்குரிய வெற்றியை பெற்றுள்ளது.

மேற்குவங்கத்தில் மாநிலக் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் வென்றிருக்கிறது, கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம்,ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கவனிக்கத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. பாஜகவுக்கு எதிராக போட்டியிட்டு காங்கிரஸ் வெல்லாது என்ற எண்ணம் இந்த தேர்தல் மூலம் நொறுக்கப்பட்டுள்ளது.

இந்து ராஷ்டிரம், இந்தி, ராமன்,  முஸ்லீம் வெறுப்பு போன்றவைகளால் இதுவரை வென்று வந்த பாஜகவுக்கு இனி வருங்காலங்களில் அது மட்டுமே போதுமானதாக இருக்கப் போவதில்லை. ஆனால் இந்திய வரலாற்றை புரட்டிப் போட வல்ல விவசாயிகள் போராட்டம்தான் இந்துத்துவ எழுச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இந்துத்துவத்தின் இதயப்பகுதிகளில் நடந்த போராட்டங்கள் பாஜகவுக்கு எதிராக போராக மாறியது. ஆனால். இந்த போராட்டத்தை ட்விட்டரிலும் , சமூக வலைத்தளங்களிலும் ஆதரித்த காங்கிரஸ் இந்த  போராட்டத்தை அரசியல் ரீதியாக கையாளவில்லை.பல இடங்களில் பாஜக அமைச்சர்கள் ஏன் முன்னாள் முதல்வர்களே தாக்கப்படும் சூழல்  உருவாகியிருக்கிறது.

 அரியானா மாநிலம்  ஹிசார் மாவட்டத்தில் இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக சென்ற பா.ஜ.க. எம்.பி ராம் சந்தர் ஜங்ராவின் காரை கறுப்புக் கொடிகளை ஏந்திய போராட்டக்காரர்கள் குழு  தடுத்து உள்ளது. அப்போது   மர்ம நபர்கள் சிலர் கார் மீது தாக்குதல் நடத்தினர்.அதற்கு காரணம்  போராடும் விவசாயிகளை இந்த எம்.பி மிக மோசமாக விமர்சித்தார். அவர்களை திருடர்கள் குடிகாரர்கள் என்றார். அதன் பின்விளைவுதான் இது.

சிறுபான்மை மக்களையும், விளிம்பு நிலை மக்களையும் மிக மோசமாக சித்தரித்து அரசியல் செய்து பாஜகவுக்கு இது அதிர்ச்சியாகவே இருக்கிறது.ஆனால் தேர்தல் அரசியலில் பங்கேற்கும் கட்சிகள்தான் விவசாயிகளின் போராட்டங்களில் இருந்து எதனையும் கற்றுக் கொள்ளவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Exit mobile version