இந்தியாவின் முப்படை தலைமை தளபதி உட்பட ராணுவ அதிகாரிகள் விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப் படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முப்படைகளின் முதல் தளபதியாக 2016 -ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவர் பிபின் ராவத். உத்தரகாண்ட் மாநிலத்தில் 1958-ஆம் ஆண்டு பிறந்த பிபின் ராவத், முப்படைகளின் தளபதியாகி விரைவில் ஓய்வு பெற இருந்தார்.
இன்று மதியம் ஊட்டி விலிங்கடன் ராணுவப் பள்ளியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சூலூரில் இருந்து ராணுவ விமானத்தில் சென்ற போது மதியம் 12-30 மணியளவில் விபத்திற்குள்ளாகி இறந்திருக்கிறார்.
இதை எதிர்பாராத விபத்து என இந்திய விமானப்படை பிபின் ராவத்தும் அவருடைய மனைவி உட்பட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக
அறிவித்துள்ளது.பனிமூட்டம் காரணமாக இறங்குதளத்தை கணிக்க முடியாமல் தாழ்வாகப் பறந்து மரங்கள் மீது மோதி கீழே விழுந்து தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்பதை விபத்தை நேரில் பார்த்தவர்கள் குன்னூரில் உள்ள சூழ்நிலைகள் உணர்த்துகின்றன.