Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் அனுமதியில்லை- அமைச்சர் விளக்கம்!

ஆண்டு தோறும் பதட்டத்தை உருவாக்கும் மத ஊர்வலமாக நடைபெறுவது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆகும். விநாயகர் அரசியலுக்காகவும் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இந்த ஊர்வலம் பட இடங்களில் கலவரங்களுக்கும் தாக்குதல்களுக்கும் காரணமாகி விட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.ஆனால் அதை வைத்து மதக்கலவரங்களுக்கு திட்டமிட்டு வருகிறது பாஜக. இன்று சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் காந்தி விநாயகர் ஊரலங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் கூட தடை உள்ளது. விநாயகர் ஊரவலங்களுக்கு கர்நாடக மாநிலத்தில் அனுமதியளிக்கப்படவில்லை. மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்திலும் பண்டிகைகளில் மக்கள் கூட அனுமதிக்க வேண்டாம். என்றும் குறிப்பிட்டுள்ளதால் விநாயகர் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விநாயகர் வழிபாட்டை வீட்டில் இருந்தே கொண்டாட முடியும்” என்று பதிலளித்தார்.

Exit mobile version