Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைச் சிறுத்தைகளுக்கு சின்னம் சிக்கல்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே இருக்கிறது. திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் இரண்டு தொகுதிகள் பொதுத் தொகுதிகள்.

திருப்போரூர், நாகை என இரண்டு பொதுத்தொகுதிகளில் போட்டியிடுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.  தேர்தலுக்கு இன்னும் 17 நாடகளே  உள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான நேரமும் முடிந்து விட்டது.

ஆனால், இன்னும் தேர்தல் கமிஷன் விடுதலைச் சிறுத்தைகளுக்கான சின்னம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. துவக்கத்தில் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திமுக  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால், தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்ரு திருமாவளவன் சொன்னார். இரண்டு பொதுத் தொகுதிகளாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று திமுக சொன்னதையும் கேட்கவில்லை. தாமதமாக வேட்பாளர்களை அறிவித்து சின்னத்துக்காக காத்திருக்கும் விடுதலைச் சிறுட்த்தைகள்  வேட்பாளர்கள் வாக்குக் கேட்பதில் இது சுணக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த தேர்தலில் நாம் தமிழர், மய்யம், பாமக, தேமுதிக, அம முக என பாஜக விரும்பும் கட்சிகளுக்கு கேட்ட சின்னம் கிடைத்திருக்கிறது.ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கேட்ட சின்னங்கள் எதனையும் ஒதுக்கவில்லை. இதை புரிந்து கொண்ட திமுக கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. பிரச்சாரத்திற்கும் தேர்தல் நடைபெறும் நாளுக்கும் இடையில் இருக்கும் மிகக் குறைவான நாட்கள். இந்த குறைவான நாட்களுக்குள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இருக்கும் சிக்கல் என பல கட்சிகள் இந்த முடிவை எடுத்து விட்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது என பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆனால் சின்னமே ஒதுக்காத நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இது ஆறு தொகுதிகளிலும் சிக்கலை  ஏற்படுத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே கருதுகிறார்கள்.

Exit mobile version