Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விக்னேஸ்வரன் நியமனத்திற்கு டயான் ஜெயதிலக பாராட்டு

dr-dayan-jayatillekaபாசிச அரசமைப்பின் கீழ் பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் கூட்டத்திடமிருந்து இராணுவ ஆட்சியின் காலடியில் வாக்குப் பொறுக்கி அதிகாரத்திற்கு வர முயலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாடகை வேட்பாளார் சி.வி.விக்னேஸ்வரனின் நியமனத்திற்கு டயான் ஜெயதிலக பாராட்டுத் தெரிவித்துளார்.
இந்த நியமனம் அனைத்து இலங்கையர்களையும் பெருமைப்படுத்துவதாகும் என டயான் ஜெயதிலக கூறியுள்ளார். இலங்கை அரச பாசிசத்தின் பிரச்சாரப் பீரங்கியாக வன்னிப் படுகொலைகளின் போது செயற்பட்ட டயான் ஜெயதிலக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராகவும் வேலை பார்த்தவர்.
விக்னேஸ்வரன் சமஷ்டி முறைமையை போற்றும் அதேவேளை எந்த சந்தர்ப்பத்திலும் நாடு பிளவடைய வேண்டுமென வலியுறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தமை ஓர் தந்திரோபாயமான நகர்வாகவே கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேவையை முழுமையாக புரிந்து கொண்டு தீர்மானம் எடுக்கின்றனர்.
விக்னேஸ்வரன் தமிழ் மென்மை அதிகாரத்தின் குறியீடாக திகழ்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் நாட்டின் மென்மை அதிகாத்தின் குறியீடாக மாற்றமடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னிப் படுகொ.லைகளின் போது மௌனாமாகவிருந்த தமிழ் மேட்டுகுடி வேட்பாளருக்கு அந்தப் படுகொலைகளை மறைத்துப் பிரச்சாரம் செய்த டயான் ஜெயதிலக பாராட்டுத் தெரிவிப்பதில் வியப்பேதும் இல்லை.

Exit mobile version