
தன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு காரணமாக ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படுவதை தவிர்ப்பதாக தான் அடைக்கலம் புகுந்திருந்த லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தின் மாடத்தில் நின்று அவர் உரையாற்றினார்.
தனக்கு அரசியல் த ஞ்சம் வழங்கியதற்காக எக்வடாருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அமெரிக்கா மீது ஆத்திரத்துடன் கண்டனங்களைத் தெரிவித்தார்.
இரகசிய ஆவணங்களைக் வெளியிட்டமைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதிமொழியை வாஷிங்டன் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தனக்கு ஆதரவு அளிக்காதமைக்காக பிரிட்டன், சுவீடன் மற்றும் தனது தாய்நாடான ஆஸ்திரேலியா ஆகியவற்றை அவர் விமர்சித்தார்.