இலங்கை அரச துணைக்குழுக்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தமிழ்ப் பேசும் மக்கள் தமது அரச எதிர்ப்பை கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் ஊடாக வெளிப்படுத்தினர். அவர்களின் ஒற்றை வாக்கைக் கூட அவமானப்படுத்தும் வகையில் ஜேனிவா செல்ல மறுப்பதற்கான காரணத்தைக் கூட மக்கள் மத்தியில் அவர்கள் முன்வைக்கத் தவறிவிட்டனர்.
ராஜபக்ச குடும்பம் தமக்கான ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கு தாரளமான பணமுடிச்சுக்களை வழங்கிவருகிறது என்பது இலங்கையில் சாதாரணமாக அறியப்பட்ட விடயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்ல மறுத்ததற்கான காரணங்கள் இன்னமும் தெளிகவில்லை. வன்னினிப் படுகொலை போன்ற மனித குல அழிப்பின் சூத்திரதாரிகளான ராஜபக்ச பாசிசக் கும்பலும் அதன் பின்புலத்தில் செயலாற்றும் பேரினவாதத் தத்துவமும் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் சிலவே தேசியக் கூட்டமைப்புப் போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகளுக்குக் காணப்படுகின்றன, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்றாக மேற்குலகின் ஜனநாயக முற்பொக்காளர்கள் மத்தியில் இனப்படுகொலையின் கோரம் குறித்துக் குரல்கொடுக்க குறைந்தபட்ச நடவடிக்கையைக் கூட முன்னெடுக்கத் தவறும் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற எம்பிக்களான சிறீதரன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் ஜெனீவா பயணத்தினால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்று பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டனர்.