Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வலிகாமம் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக 5,000 வழக்கு

valikaamaamயாழ். வலிகாமம் பகுதியில் மக்களின் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக 5,000 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டன.
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற வலிகாமம் பகுதிக் காணிகளை விடுவித்து மக்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 29ஆம் திகதி தெல்லிப்பழையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயாயிரம் வழக்குகளை நீதிமன்றில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.

Exit mobile version