தேர்தலுக்கு முன்னதாகவே கண்காணிப்பாளர்களால் இந்ததேர்தல் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் அமைந்திருக்குமா என சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. தேர்தல் தொடர்பான வன்முறைகளுக்கெதிராகவும், பொதுச் சொத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுகெதிராகவும், நடவடிக்கை மேற்கொண்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தத் தவறிவிட்ட பொலீசாரினதும், தேர்தல் ஆணையகத்தினதும் திட்டமிட்ட நடவடிக்கையானது, இச்சந்தேகங்கள் எழக் காரணமாகியது.
ஆரம்பத்தில் வன்முறை நடவடிக்கைகள் மிகக் குறைவானதாகக் காணப்பட்டாலும், தேர்தலுக்கான திகதி நெருங்க வன்முறைகள் அதிகரிக்கவாரம்பித்தன.
Election monitors Campaign for Free and Fair Elections (CAFFE), People’s Action for Free and Far Elections (PAFFREL) போன்ற அமைப்புக்கள் ஏலவே வன்முறைகளின் அளவு இறுதிக்கட்டத்தில் அதிகரிக்கலாம் என எச்சரித்திருந்தன.
முன்னைய ஐந்து மாகாணங்களுக்குமான தேர்தல்களுடன் ஒப்புனோக்கும் போது, கடந்தவருட நடுப்பகுதியில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்குப் பிறகு, நடைபெற்ற இரண்டாவது மோசமான தேர்தல் என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருதுகின்றனர்.
முன்-தேர்தல் காலகட்டமானது, கொலைகளாலும், வன்முறகளாலும், பயமுறுத்தல்களாலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
வடமேற்கு மற்றும் மத்திய மாகாணத் தேர்தல்களுடன் ஒப்புநோக்கும் போது, வன்முறைகளும் முறையீடுகளும் அதிகமானதாகக் காணப்பட்டது. என்கிறார் PAFFRE இன் தலைவர் கின்ஸ்லி ரொட்ரிகோ.
சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிபடையாகவே நிராகரித்துவிட்ட காவற்துறை மேலாளர் (Inspector General of Police (IGP)), மற்றும் தேர்தல் ஆணையாளர் (Elections Commissioner (EC))
ஆகியோரின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொள்ளும் போது, 17 வது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கமும், தேசிய போலிஸ் ஆணயகத்தின் நியமனமும், சுதந்திர தேர்தல் ஆணையகத்தின் உருவாக்கமும் முன்னெப்போதுமில்லாத வகையில் அவசியமானதாக உள்ளது.
காவற்துறை மேலாளர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொள்ளும் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும். அவரது அரசும் முழு அதிகாரவர்க்கத்தையும் தமது அரசியலுக்குள் உட்படுத்திவிட்டார்களா என பல எதிர்க்கட்சிப் அரசியல் வாதிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
காவற்துறை மேலாளரும் (IGP), தேர்தல் ஆணையாளரும்(EC), அரசின் தந்திரோபாயங்களுக்கு நேரடியாகவே ஆதரவு வழங்கியும், எதிர்க்கட்சிகளின் முறைபாடுகளைப் புறக்கணித்தும் சூழலில், திட்டமிட்டே 17 வது திருத்தச் சட்டததை அரசு பின்போடும் பின்புலத்தில், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை எதிர் நோக்கி யாரிடம் முறையிடுவது என்று கேள்வியெழுப்பும் ஜேவீபீ யின் கம்பஹா மாவட்டத் தலைவர் வருணா ராஜபக்ச எல்லா தேசபக்த்தர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் மீது 17 வது திருத்தச் சட்டத்தினைப் பிரயோகிகுமாறு அழுத்தம் பிரயோகிகாதவரையில் இலங்கையில் சர்வாதிகார அரசையே எதிர் நோக்க வேண்டியுள்ளதாக மேலும்
சண்டே லீடருக்குத் தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் ஆணையாளருக்கும் உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் எதிராக அவர்கள் ஆயிரக்கணக்கான கொழும்பு வாக்காளர்களின் இரட்டைப் பதிவு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தவறியதைச் சுட்டிக்காட்டி வழக்குத் தாக்கல் மேற்கொண்டுளது.
கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் பதிவுகளை 2007 பதிவிட்ட வாக்காளர்களின் அடிப்படையில் ஒவ்வொன்றாக ஆராய்ந்தCAFFE ஒரே அடையாள அட்டை இலக்கத்திஅக் கொண்ட பலர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் போலியான முகவரிகளில் வாக்காளர்களாகப் பதியப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ஏறக்குறைய 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இரட்டைப்பதிவுகளைக் கொண்டிருந்ததை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டிருந்த போதும், வாக்காளர் அட்டைகளை விநியோகம் செய்வதைத் தடைசெய்வது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு தான் பொலிஸ் தலைமை நடந்து கொள்ளுமாயின் ஏனைய கீழ்னிலை உத்தியோகத்தர்களிடம் எதனை எதிர்பார்க்க முடியும் என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் திஸ்ச அத்தநாயக்க.
தேர்தல் ஆணையாளரே தேர்தலுக்கும் முதல் நாள் வரை ஊடகங்களூடாக எதிர்க்கட்சிகள் விளம்பரம் பெற்றுக்கொள்வதைத் தடைசெய்யும் நிகழ்வானது உலக வரலாற்றில் முதல்தடவையாக நிகழ்ந்துள்ளது என்கிறார் ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்ம்பு வேட்பாளர் சுஜீவ சேனசிங்க.
சண்டே லீடரிலிருந்து இனியொருவிற்காக மொழியாக்கம் : நிவேதா சுந்தரலிங்கம்
Courtesy: Sunday Leader
தொடர்பான பதிவுகள் :
தேர்தலில் அரசாங்கத்திற்கு அமோக வெற்றி : மஹிந்த
இலங்கைத் தேர்தல் : போரின் மீதான அதிருப்தி