Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியர் இட ஒதுக்கீடு நீதிமன்ற தடையை விலக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை இணைக்க நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அப்போது பாமக தரப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித  இட ஒதுக்கீடு வழங்கினால் கூட்டணியில் இணைவோம் என நிபந்தனை வைத்தனர்.

இந்த நிபந்தனையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி  எம்.பி.சி சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டில் 10.5 சதவிகித   உள் இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு மட்டும் அளித்தார். அதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்து தோல்வியும் அடைந்தது.

ஆனால். பல சாதிகள் அனுபவித்துக் கொண்டிருந்த இட ஒதுக்கீட்டை எடுத்து வன்னியர்களுக்குக் கொடுத்த நிகழ்வு அதிர்ச்சியை  உருவாக்கியது. நூற்றுக்கணக்கான எம்பிசி சாதிகள் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றம் செல்ல மதுரை உயர்நீதிமன்றம் “சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எந்த அடிப்படையும் இல்லாமல்  தேர்தல் காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்தை மீறும் செயல்”- என வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

மதுரை உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதனை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பேசுகையில், ` நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க விரும்பவில்லை’ எனக் கூறிவிட்டு, `10.5 சதவிகித இடஒதுக்கீட்டில் ஏற்கெனவே நடைபெற்ற பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் மாற்றம் செய்யக் கூடாது’ எனவும் `இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில் புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது’ எனக் குறிப்பிட்டுவிட்டு பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சாதியினருக்கான கட்சி ஆனால் வன்னியர்களே அக்கட்சியை தேர்தலில் வெற்றி பெற வைப்பதில்லை.ஆனாலும் சாதி வாக்குகளைக் கவர ராமதாஸ் தொடர்ந்து சாதி வெறியை பரப்பி வருகிறார்.

Exit mobile version