Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியர்களுக்கு மணி மண்டபம் முதல்வர் ஸ்டாலில் அறிவிப்பு!

தமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநித்துவத்திற்காகவும், மொழிக்காகவும், தமிழ்நாடு என்ற பெயருக்காகவும்,இட ஒதுக்கீட்டிற்காகவும் போராடி  உயிர்நீத்தவர்கள் பலர். அதில் மிக முக்கியமான போராட்டம் வட மாவட்டங்களில் வன்னியர்கள் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டம்.  1987 –ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த அந்த போராட்டத்தில் 21 வன்னியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அந்த நிகழ்வின் பின்னர்தான் டாக்டர் ராமதாஸ் அரசியலில் எழுச்சி பெற்று வந்தார்.

பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி  இந்தியாவிலேயே முதன் முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒருங்கிணைத்து 20% இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இப்போது,  அந்த 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10.5 சதவிகிதம் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டது. இது பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்துள்ளது. பல சாதியினர் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளார்கள்.இந்நிலையில்,

1987 போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் நினைவாக விழுப்புரத்தில் 4 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார்.

வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்குவங்கியை திமுக தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறது. வன்னியர்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கும் ராமதாஸ் கையில் இருந்து அம்மக்களை நிரந்தரமாக தங்கள் பக்கம் ஈர்க்க திமுக முயலும் அதே வேளை. இந்நடவடிக்கை குறிப்பாக இட ஒதுக்கீடு பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வேலைவாய்ப்பு, கல்வி உரிமையை தூக்கி வன்னியர்களுக்கு கொடுத்து  விட்டதான கருத்து பிற மக்களிடம் பரவியும் வருகிறது.

Exit mobile version