Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடியாத வெள்ளம் திவீரமடையும் மழை!

தமிழ்நாடு முழுக்க பரவலாக பெய்துவரும் மழை மேலும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியவில்லை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கையும், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டணம் முதல் சென்னை வரை மிக கன மழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான ஏரி குளங்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. தமிழ்நாடு முழுக்க உள்ள 3,954  பாசன ஏரிகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தேங்கி நின்ற மழைநீர் வடிந்த நிலையில் பெரும்பலான இடங்களில் தண்ணீர் வடிந்து விட்டது. ஆனால் பல இடங்களில் வடிகால் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் தண்ணீர் வடியவில்லை. மூடப்பட்டுள்ள இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் திவீரமடைந்திருக்கும் நிலையில் மழை மேலும் திவீரமடைந்து வருகிறது. இன்றும் நாளையும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, காரைக்கால், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மழை பெய்யத்துவங்கியிருப்பதால் மக்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version