Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது!

kamalநெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் என்பவர் கடந்தவாரம் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக இலங்கை அரச புலனாய்வுப் படையினரால் கமலேந்திரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் . ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான கமலேந்திரன்,  இன்று கொழும்பில் வைத்து இரகசிய குற்ற புலனாய்வு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலனையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் எல்லாப் பாசிச அரசுகளையும் போன்று துணைக்குழுக்களைத் தேவையானவரை பயன்படுத்திவிட்டு அழிக்கும் முயற்சியை மகிந்த அரசு ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ஈ.பி.டி.பி போன்ற மக்களிலிருந்து தனிமைப்பட்ட கட்சிகளை விட மக்கள் ஆதவு பெற்ற தனிநபர்களையும் கட்சிகளையும் இலங்கை அரசு தனது பயங்கரவாத வலைக்குள் கொண்டுள்ளது.இதனால் ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின் தேவை இலங்கை அரசிற்கு அருகி வருகின்றது.
ரஜீவின் கொலை ஈ.பி.டி.பி இன் உள்வீட்டு விவகாரம் என்பது மக்களுக்கு வெளிப்படையானதாக இருந்தாலும் புலனாய்வுப் பிரிவின் ஆதரவின்றி அது நடைபெற்றிருக்க முடியாது என்ற ஊகத்தையும் வெளியிட்டிருந்தனர்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் ரஜீவைக் கொலை செய்தது புலானாய்வுப் பிரிவு?

Exit mobile version