மக்களின் பணத்தை அரசுகளின் உதவியுடன் வங்கிகள் பறித்துக்கொண்டது மட்டுமல்ல சட்டவிரோதப் பணமும் வங்களைக் காப்பாற்றுவதற்குத் துணைபுரிந்திருக்கின்றன.
போதைவஸ்துக்கு அடிமையான குழந்தைகள் கோரமாக மடிவதை ஐரோப்பியத் தொலைக்காட்சிகள் அடிக்கடி காட்டித் தொலைப்பதைப் பார்த்திருக்கிறோம்.
ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான பெண் துடித்துத் துடித்து மரணித்துப் போனதைப் பற்றி பிரித்தானிய தொலைக்காடசியில் பார்த்த அனைத்தும் அடிக்கடி நினைவு வந்து போகும்.
2008 ஆண்டு வங்களை சரிவிலிருந்து காப்பாற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பதுக்கிவைத்திருந்த பணத்தை உலகம் முழுவதும் ஐரோப்பிய அமரிக்க அரசுகளின் ஒத்துழைப்போடு வங்கிகள் தேடிச்சென்றன.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி அந்தோனியோ மரியா கோஸ்டா பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பணத்தை வங்கள் தமது முதலீடாக ஏற்றுக்கொண்டதற்கான ஆதரங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறுகிறார்.
வங்கிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகொண்டு 352 பில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள பணத்தைப் பெற்றுக்கொண்டன. அவற்றை வங்கிகளில் வைப்பிட்டு சட்டரீதியான பணமாக்கிக்கொண்டன. சட்டவிரோதமாக தலைமறைவாக உலகம் முழுவதும் கட்டுக்கட்டாகப் பணத்தைப் பதுக்கிவைத்திருந்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் இப்போது நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்கள்.
சமூகத்தின் ஒரு பகுதியின் அழிவிற்குக் காரணமாகவிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இன்று மேற்கின் ‘ஜனநாயகத்தின்’ பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டார்கள்.
பல்தேசிய கிரிமினல்களில் ஆரம்பித்த ஏகாதிபத்திய பொருள் உற்பத்தி இன்று போதைப்பொருள் கிரிமினல்கள் வரை விரிந்து வியாபித்துள்ளது.
கட்டுக்கட்டாக பணத் தாள்களாக இந்த முதலீடுகள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கோஸ்டா கூறுகின்றார்.
நிலமை இவ்வாறிருக்க ஐரோப்பிய அமரிக்க வங்கிகளில் சட்டவிரோத மில்லியன்கள் இந்தியா ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து முதலீடு செய்யப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. சுவிஸ் வங்களில் மட்டும் 2.33 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்திய சட்டவிரோதப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் கணிப்பிடப்படுகிறது.
மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாக மக்களைக் கொன்று குவிக்கும் மேற்கு அதிகார வர்க்கம் தமது நாடுகளுக்குள் உலகின் அதிபயங்கரக் குற்ற்வாளிகளை உள்வாங்கி பாதுகாப்புக் கொடுக்கிறது.
மெக்சிகோவின் அதிபயங்கர கொலைகார போதைப்பொருள் கடத்தல் குழுக்களிடமிருந்து மில்லியன் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ஆதரங்கள் வெளியான போது HSBC வங்கி அதற்காக மன்னிப்புக் கோரியது.யாரும் தண்டிக்கப்படவில்லை.
இது தவிர அமரிக்க கட்சிகளும், உளவு நிறுவனமும் போதைப்பொருள் கடத்தலில் பல வருடங்களாக ஈடுபட்டுவருவது பலராலும் கூறப்பட்டது. இன்று ஆப்கனிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமரிக்க இராணுவம் போதைவஸ்து உற்பத்தி செய்வதற்கான ஆதரங்களை குளோபல்ரீசேர்ச் இணையம் வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் உற்பத்தியாகும் பகுதிகளை தலிபான்களிடமிருந்து அமரிக்க இராணுவம் பாதுகாப்பதற்கான ஆதரங்களை அந்த இணையம் வெளியிட்டுள்ளது.
‘ராஜபக்சவை ‘மனிதாபிமானமும், ஜனநாயகமும்’ கோலோச்சும் அமரிக்கவுக்கு போட்டுக்கொடுத்து தமிழ் ஈழம் பெற்றுக்கொள்வோமாக’