லைக்கா மொபைல் என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான தொடர்பும், லைக்கா மொபைல் டேவிட் கமரன் கட்சிக்கு வழங்கிய நிதி தொடர்பான ஆதரங்களும் கடந்த சில வாரங்களக வெளியாகியிருந்தன. இனியொரு இணையம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டிருந்தது. லைக்கா மொபல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைக்கா பிளை நிறுவனத்தின் இணைப்பாளரும் லைக்கா ஊடகப் பேச்சாளருமான திரு.சிவசாமி ஆகியோர் இலங்கை அரச விமானப்படை விமானத்தில் சென்று இறங்கும் காட்சி இன்று வெளியானது. இந்த் இருவரோடும் இலங்கை அரச அமைச்சராகவிருந்த கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய மற்றும் ஐங்கரன் நிறுவன உரிமையாளர் கருணாகரமூர்த்தி ஆகியோர் காணப்படுகின்றனர். ஐங்கரன் நிறுவனம் தென்னிந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்களைப் புலம் பெயர் நாடுகளுக்கு இறக்குமதி செய்து வினியோகித்துவரும் நிறுவனமாகும். தவிர, தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்துவரும் ஐங்கரன் அங்கு அவர்களுடனான நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது.
தமிழ்ப் பேசும் மக்களை இனக்கொலை செய்த இரத்தம் தோய்ந்த விமானத்தில் பலபில்லியன் தமிழ் வியாபாரிகளின் பயணம் என்பட்து இனப்படுகொலையின் பின்புலத்தில் வியாபாரிகளின் செயற்பாடுகளுக்கு சிறந்த உதாரணம்.
தொடர்பான அனைத்துச் செய்திகளும்:
பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
வியாபாரி! : விஜி.
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி
Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses
http://www.eelamdaily.com/news/11847/57/.aspx
http://www.huffingtonpost.co.u
http://www.dailynews.lk/local/