Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்காவின் கத்தி சத்தமின்றி வருகிறது

sep19-14
பாஸ்கரன், சுபாஸ்கரன்

புலம்பெயர் நாட்டில் வாழும் ஈழத்தமிழ் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் கத்தி திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சென்னையில் ஊடக மாநாடு ஒன்றைக் கத்தி திரப்படம் தொடர்பாக சுபாஸ்கரன், வெக்டோன் ரெலிகொம் உரிமையாளரான அவரது சகோதரர் பாஸ்கரன் ஆகியோருடன் மற்றும் சிலரும் இணைந்து நடத்தினர். இலங்கை அரச தொடர்பு தமக்கிருப்பதாக ஊடகங்களில் வெளிவரும் செய்தி எதிரிகளின் வெற்றுப் பிரச்சாரம் என சுபாஸ்கரன் ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

பின்னர் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவிலும் இதே கருத்தை சுபாஸ்கரன் முன்வைத்தார் அதனுடன் கூடவே தானும் தமிழன் தான் என்பதையும் சேர்த்துக்கொண்டார். 90 களில் பிரான்சிற்கு அகதியாகச் சென்ற சுபாஸ்கரன் புலம்பெயர் தமிழர்களை மையமாகக் கொண்ட தொலை பேசி வியாபாரத்தை மேற்கொண்டு மில்லியனரானார். லண்டனிற்கு இடம்பெயர்ந்த சுபாஸ்கரன் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடை பெறுவதற்கு ஒரு வருடங்களின் முன்பாகவே இலங்கை அரசுடனும் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்துடனும் வியாபாரத்தில் ஈடுபட்டார்.

வன்னி இனப்படுகொலை நடைபெற்ற காலத்தில் லண்டனிலிருந்து பெரும்பாலான தொலை பேசி அழைப்புக்கள் லைக்கா தொலை பேசி வலையமைப்பின் ஊடாகவே இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்டன. அக்காலப் பகுதியிலேயே இலங்கை அரசுடன் நேரடியான நெருங்கிய நம்பகரமான தொடர்புகளை லைக்கா பேணியது.

லைக்கா மோபைல் இலங்கை இனப்படுகொலை அரசு நடத்திய பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் வியாபார ஒன்றுகூடலுக்கு பிரதான நிதிவழங்கிய(Gold Sponsor) நிறுவனம். இதனைத் தவிர வடக்குக் கிழக்கில் ஞானம் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தையும் லைக்கா நடத்தி வருகிறது. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் வரிகட்டாமல் தப்பிக்கொள்வதற்காக ஐரோப்பிய அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட கோப்ரட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் இத் தன்னார்வ தொண்டு நிறுவனம் இலங்கையில் நடத்தப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களே தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன என்று இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்ட காலத்திலேயே ஞானம் பவுண்டேசன் இலங்ககை அரசின் ஆசி பெற்று இயங்கிவந்தமை ராஜப்கச அரசுடனான அந்த நிறுவனத்தின் நெருக்கத்தைக் காட்டுகின்றது. ஆனால் தாம் அரசியல் நோக்கங்களைக் கொண்டிராத காரணத்தால் சேவை செய்ய இலங்கை அரசு தன்னை அனுமதித்ததாகக் சுபாஸ்கரன் கூறுகிறார்.

லைக்கா நிறுவனம் ராஜபக்சவின் சகோதரியின் மகனான ஹிமால் ஹெட்டியாராச்சி என்பவருடன் இணைந்து 2008 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே ஸ்கைநெட்வேர்க் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தது. அந்த நிறுவனத்தின் 95 வீதமான பங்குகள் லைக்கா நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதற்கான முழுமையான ஆதாரத்தை சண்டேலீடர் என்ற ஆங்கிலப்பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.(ஆதாரம் இணைப்பு).
ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து எவ்வாறு நூறு மில்லியன் டோலர்கள் மக்களின் பணத்தை எப்படி லைக்கா திருடியது என்பதற்கான ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த இதே நிறுவனம் இலங்கையில் தன்னார்வ நிறுவனம் நடத்தி மக்களுக்குச் சேவை செய்வதாக மார்தட்டிக் கொள்கிறது. இனக்கொலையாளிகளுடன் இணைந்து பணக்கொள்ளை நடத்திய லைக்கா பணத்துக்காக தேசியம் பேசும்ம் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் வாயை பணத்தால் மூடிவிட்டதால், ஈழம் பிடித்துத் தரப் புறப்பட்ட பேர்வழிகள் தமது இருப்பிடங்கள் அமைதியாக உறங்கச் சென்றனர்.
லைக்காவின் இலங்கை அரசு தொடர்புகள் குறித்த பல்வேறு ஆதாரங்கள் இனியொருவில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன.
லைக்கா நிறுவனத்தின் பணக் கொடுப்பனவில் புலம் பெயர் நாடுகளில் பல்வேறு களியாட்ட நிகழ்ச்சிகள் இன்றும் இடம்பெறுகின்றன. லைக்காவின் விளம்பரங்களுடன் புலம் பெயர் தொலைக்காட்சிகள் மற்றும் சில இணைய ஊடகங்கள் இயங்கி வருகின்றன.

இலங்கையின் முன்னை நாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் என் சில்வா, லைக்கா மொபைல் இலங்கை அரசுடன் இணைந்து நடத்திய ஊழல் நாடகத்தின் பின் மகிந்தவை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். லைக்கா நிறுவனம் – மகிந்த குடும்ப ஊழல் சண்டே லீடர் ஊடகத்தில் வெளியாகி குறுகிய காலத்திலேயே அதன் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார் என்பதும் இங்கு கருத்தில் கொள்ளபட வேண்டிய ஒன்றாகும்.

புலம்பெயர் நாடுகளில் லைக்கா நிறுவனம் மற்றும் தென்னிந்தியக் கலாச்சாரக் குப்பைகளின் இறக்குமதிக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்த வேளையில் போலித் தேசிய வாதிகளாலும், தமிழ் உணர்வாளர் என்று கூறிக்கொள்ளும் கும்பல்களாலும் அவை கையகப்படுத்தப்பட்டு அவர்களின் பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. கத்தி திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்கள் புலம்பெயர் சூழலில் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஒன்று மட்டுமே நமது நம்பிக்கை.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

லைக்கா : குருதிபடிந்த கரங்கள்

இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

வியாபாரி! : விஜி.

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

இலங்கை அரசுடன் லைக்கா  நடத்திய ஊழல் பண வேட்டையிபன் ஆதர ஆவணம்:

29th June 2007
Board Paper PLC/T/65/2007

Equity Acquisition of Sky Network (Pvt) Ltd – WiMaX frequency owned company

1. Introduction

SLT has done field trials on WiMax Services and is awaiting frequency allocation to launch WiMax services in Sri Lanka which is a wireless broadband solution. SLT has already applied for the WiMax frequency from the Telecommunication Regulatory Commission of Sri Lanka (TRCSL) but despite repeated reminders there has still been no progress to obtain these frequencies. Dialog Broadband and Suntel already own frequencies and they have already rolled out their WiMax networks ready for service offering. The time to market and first mover advantage is very critical in this business as well and SLT will lag behind with the delays and SLT will become another follower in the market. Similar experiences have been there in the past too.

Lyca Group in UK which is a virtual operator in UK has approached SLT for business through its 95% owned subsidiary Sky Network, which has been given WiMax frequency to operate islandwide. SLT is considering an acquisition strategy as an option. In response to initial inquiry to go forward with partnership with equity acquisition of this company to launch WiMax services was positively responded. It is also, possible to leverage cost advantage and operational efficiency through such arrangements.

2. About Sky Network

(i) Name: Sky Network (Pvt) Limited

(ii) Company registration number: N(PVS) 46122

(iii) Share Holding:

95% Hastings Trading E Services – Portugal (subsidiary of Lyca Group)
5%, Himal Laleendra Hettiarachchi

(iv) Board Members
1. Milind Kangle (Chairman) – CEO of Lyca Mobile UK Ltd
2. Christopher Tooley
3. Himal Laleendra Hettiarachchi

WiMax Frequency
1. 2400-2430 MHz (Islandwide)
2. 5470-5850 MHz (Selected urban towns around Colombo)
3. 3500 MHz band to be reserved on exclusive basis upon submission of business plan

3. Recommendations
Board approval is sought to carry out a Valuation and Due Diligence on Sky Network (Pvt) Limited with a view of equity acquisition and by retaining Certified Public Accountants Ernst & Young for this purpose.

Shoji Takahashi P. N. E. Abayasekara
Chief Executive Officer Chief Corporate Officer – See more at: http://www.theweekendleader.com/Headlines/2988/special:-lyca-network-and-rajapaksa-connections-.html#sthash.QdgjzsIx.dpuf

Exit mobile version