தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டி கத்தோலிகப் பள்ளியில் படித்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மதமாற்றம்தான் மாணவி தற்கொலைக்கு காரணம் என பாஜக உட்பட இந்துத்துவ அமைப்புகள் கூறி வந்தன. இதற்கு ஆதாரமாக அவர்கள் ஒரு சின்ன விடியோ துண்டையும் வெளியிட்டனர்.
இநிலையில் அம்மாணவி பேசியமுழு விடியோவும் வெளியானது. அதில் மாணவி மரணத்திற்கு மத மாற்றம் காரணமில்லை என்று தெளிவானது. லாவண்யாவின் சித்தி சரண்யாவும் லாவண்யாவின் தந்தையும் பணம் உள்ளிட்ட லாப நோக்கத்திற்காக லாவண்யாவின் மரணத்தை திசை திருப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், லாவண்யா பெற்றோர் சித்தி உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
வழக்கமாக அரியலூர், தஞ்சை மாவட்டத்தினர் சென்னை உயர்நீதிமன்றங்களில்தான் மனுத்தாக்கல்கள் செய்வார்கள். ஆனால் இந்த விஷயத்தில் மதுரையில் மனுத்தாக்கல் செய்யுமாறு பாஜகவினர் சொல்ல அவர்களும் மனுத்தாக்கல் செய்தனர்.அதில் லாவண்யா மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
முன்னதாக திருக்காட்டுப்பள்ளி காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கிற்கு பாஜகவினரும், லாவண்யாவின் சித்தியும் ஒத்துழைக்கவில்லை. ஆனால், இதே வழக்கில் தாமாக முன் வந்து லாவண்யா படித்த கத்தோலிக்கப் பள்ளி தங்களையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளுமாறு மனுதாக்கல் செய்தது. அதை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று இன்று அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. ஆனால். இடையீட்டு மனுவாக தாக்கல் செய்யபப்ட்டு அந்த வழக்கை ஜி.ஆர் சுவாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
இதுகடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.