Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லாவண்யாவின் பெற்றோர்கள் மோசமான குற்றவாளிகள்!

எட்டு  ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யாவின் தந்தை முருகானந்தத்தின் மனைவி கனிமொழி தற்கொலை செய்து கோள்கிறார். அவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள். அந்த இரு குழந்தைகளையும் தான் வசிக்கும் வீட்டின் அருகிலேயே படிக்க வைக்கும் முருகானந்தம், இறந்து போன தன் முதல் மனைவி மகளான லாவண்யாவை தஞ்சாவூரில் இருக்கும் போர்டிங் வசதியுள்ள பள்ளியில் சேர்த்தார். வெண் குஷ்டம் என்ற தோல் தொற்று நோயுள்ள குழந்தையை தன் வீட்டிற்கு வரக்கூடாது என்றேதான் அவர் அங்கு சேர்த்திருக்கிறார்.

மேலும் சித்தியின் சித்திரவதைகள் காரணமாக மாணவி லாவண்யா வீட்டிற்கே செல்லாமல்  இருந்தது. பிளஸ் டூ முடித்த பின்னர் தான் என்ன செய்வோம் என்ற குழப்பம் கவலை என பல சூழல்களால் தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த வுடன் தனது  பாஜக தொடர்புகளை பயன்படுத்தி பணம் உள்ளிட்ட ஏதோ ஒரு லாபத்திற்காக மகளின் மரணத்தையே மதவாதக் காரணமாக மாற்றி விஷ்வ இந்து பரிசத் ரௌடிகளோடு  லாவண்யாவின் தந்தையும், சித்தியும் இறந்து கொண்டிருக்கும்  லாவண்யாவை வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள். 17-ஆம் தேதி எடுத்த விடியோவை உடனே வெளியிடாமல் மாணவி மரணிக்கும் வரை காத்திருக்கிறார்கள்.

இவைகள் அனைத்துமே இப்போது அம்பலமாகி விட்டது. அரியலூர் மாணவி லாவண்யா மதமாற்றக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று பாஜக செய்த பிரச்சாரம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கோடு பரப்பட்ட இந்த வதந்தி ஒரு  பக்கம் இருந்தாலும்.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.தங்களுடைய மகள் மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது தந்தை மனுவில் கூறியிருந்தார். மேலும், இந்த வழக்கில் காவல்துறையினர் சரியாக விசாரணை செய்யவில்லை என்றும் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்றும் அவரது தந்தை தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவி லாவண்யா படித்த பள்ளியும் மனு தாக்கல் செய்தது. அதில் அரசியல் காரணங்களுக்காக மத சாயம் பூசும் வகையில் மாணவியின் மரணம் சித்திரிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவி லாவண்யா பேசியதாக பதிவு செய்யப்பட்ட காணொளி நீதித்துறை நடுவர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யும் முன்பே எடுத்துள்ளனர். ஆனால், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என அதை பரப்பியவர்கள் விரும்பினால் ஏன் முன்பே பகிரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் விசாரணை முறையாக நடந்து வருவதாகவும் இதுவரை 53 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக குறிப்பிட்டனர்.

இதற்கிடையில் பாஜக சார்பில் இந்த வழக்கை விசாரிகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினரை விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Exit mobile version