Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது : பாசிஸ்ட் ஜெயலலிதா போலிஸ் வன்முறை!

loyolaலயோலாக் கல்லூரி மாணவர்களின் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஜயலலிதா பாசிச அரசின் பொலீஸ் படை இடை நிறுத்தியது. மாணவர்களைக் கைது செய்து ராயாபேட்டை மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் அங்கு நின்றிருந்தவர்களையும் அருவருக்கத் தக்க வன்முறைகளைப் பயன்படுத்கிக் கைது செய்து, அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் அடைத்துவைத்துள்ளனர்.

உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள்  நுழைந்த காவல்துறையினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வருகை தந்திருந்த இயக்குனர் வ.கௌதமன், ராம் மற்றும் திருமுருகன் உள்ளிட்டோரையும் கைது செய்து அண்ணாநகரிலிருக்கும் கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பிரிட்டோ என்ற மாணவர் யார் என குறிவைத்து கேட்டபடியே பொலிஸார் உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரி விடுமுறை நாளில் போராட்டத்தை ஆரம்பிக்காமல் வகுப்புக்கள் நடக்கும் போது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கலாமே என பலர் கருத்துத் தெரிவிப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை கல்லூரிகள் தொடங்கப்படும் போது மாணவர் போராட்டம் மேலும் வலுவடைய கூடும் என தமிழக அரசு அஞ்சியதால் தமிழகப் போலீசுக்கே உரிய சமூகவிரோத வன்முறைகளைப் பயன்படுத்தி போராட்டத்தை அடக்கியுள்ளது. ஈழத் தாய் என்று சீமான் வைகோ உட்பட்ட அயோக்கியர்கள் போற்றும் பாசிச ஜயலலிதா அரசின் காடைத்தனம் மாணவர்களின் அடிப்படை உரிமையை மறுத்தது.

தான் ஆட்சிக்கு வந்த மறுகணமே பரமக்குடியில் மனிதப் படுகொலை செய்த ஜயலலிதா அரசும், கோட்டாபயவுடன் நாடகமாடிய கருணாநிதியும் அவர்களின் தொங்கு தசைகளும், புலம் பெயர் வியாபாரிகளும் இன்னும் எத்தனை காலத்திற்கு மக்களின் அவலத்தில் அரசியல் நடத்தப்போகிறார்கள்?
லொயலா கல்லூரி மாணவர்களின் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான தன்னெழுச்சி நம்பிக்கை தருகிறது. ஜெயலலிதா, கருணாநிதி, வை.கோ, திருமாவளவன். நெடுமாறன், சீமான் போன்ற கடைந்தெடுத்த அயோக்கியர்களின் பிடியில் சிக்காமல் அவர்களுக்கு எதிராகவும் மணவர்கள் போராடுவது நம்பிக்கை வெளிச்சம் மெதுவாகத் தெரிய ஆரம்பிப்பது போலுள்ளது.

இதே மாணவர்கள் இனிமேல் தமது எல்லைக்குள்ளேயே இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் பல்தேசிய நிறுவனங்களுக்காக இனக்கொலை நடத்தும் இந்திய அரசையும் எதிர்க்க ஆரம்பிப்பார்கள் என்பது உறுதி.

இதே வேளை யாழ்ப்பாணத்திலிருந்து லயோலாக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அங்கு சுவரொட்டி ஒட்டப்ப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு: எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு… இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது.ஜந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது… நேர்த்தியாக முறைப்படுத்தப்பட்ட இனஅழிப்பு (structural genocide)வல்லரசுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்.. திருமணத்துக்கு கூட இராணுவத்துக்கு முதல்மரியாதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. எமக்கு இங்கு சாப்பிட மாத்திரமே வாய்திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.. ‘’நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு’’ என்பது போல் சர்வதேசமும் சிங்கள அரசுடன் மறைமுகமாக கைகோர்க்கிறது.. இங்கு தினம் தினம் இசைப்பிரியாக்களும் பாலச்சந்திரன்களும் புதைக்கப்படுகிறார்கள்.. இந்நிலையில் எம்மக்களுக்கு நீதி சொல்ல தமிழகத்தை விட்டால் யாருமில்லை.. போராட இடம் கூட மறுக்கப்பட்ட நிலையில் எமக்காய் போராடும் எம் இரத்தத் உறவுகளே… லோயலா கல்லூரியில் எழுந்துள்ள இத்தீப்பொறியை தமிழக கல்லுரிகள் அனைத்துனுள்ளும் பரப்புங்கள் அன்று மாவீரர் முத்துக்குமாரன் எழுப்பிய தீயை அரசியல் அணைத்தது போல் இன்று உங்களுடைய போராட்டத்தை அணையை விடாதீர்கள்.. சமரசங்கள் பல வடிவில் வரும் சோர்ந்து போய் விடாதீர்கள்,ஏமாந்து போய் விடாதீர்கள். ‘’மாணவர் சக்தி மாபெரும் சக்தி’’

Exit mobile version