இச்சம்பவத்தை கண்ட அயலில் உள்ளவர்கள் கொடுத்த தகவலில் விரைந்து வந்த பொலிசாரும் தீயணைப்புப் படையினரும் செயற்பட்டு தீயை ஏனைய கட்டிடங்களுக்குப் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதும் சித்திரத்தேர் மீண்டும் உபயோகிக்க முடியாத அளவிக்கு எரிந்துவிட்டது.
விடுதலைப் புலிகள் சார்ந்து இயங்கிய பிரித்தானிய அமைப்புக்களிடையே மாவீரர் தினம் குறித்த வியாபார மோதலே இத்தேர் தீ வைக்கப்ப்பட்டதற்கான காரணம் என்று கருதப்படுகிறது. சர்ச்சைக்குரிய இக் கோவிலின் குறித்த ஏனைய விவகாரங்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. புலம் பெயர் நாடுகளின் “தேசிய வியாபாரிகளின்” மோதல்கள் அங்கு வாழும் மக்களை போராட்ட உணர்விலிருந்து முற்றாக அன்னியப்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.