Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று லண்டனில் கணேசன் (ஐயர்) எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீடு : 10.03.12 சனி 4 மணிக்கு

பிரபாகரனோடு இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய கணேசன் (ஐயர்) தனது அனுபவங்களையும் அதன் பின்னணியில் பொதிந்திருந்த அரசியலையும் பகிர்ந்துகொள்கின்ற நூல் பிரித்தானியாவில் வெளியிடப்படுகின்றது. “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற ஐயரின் நூல் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பொதிந்து கிடந்த மர்மமங்களை மட்டுமன்றி, அவற்றிலிருந்து எதிர்கால அரசியல் வெற்றிக்கான திறவுகோலையும் எம் மத்தியில் முன்வைக்கிறது.

போராட்டத்தின் தோல்வி குறித்த எதிர்மறைக் கூச்சல்களும், சந்தர்ப்பாவதிகளின் அணி சேர்க்கைகளும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தைச் செழுமைப்படுத்தல் குறித்த புதிய நம்பிக்கைகளை வழங்கும் ஐயரின் நூல் அறிமுகம் ஒரு வெளியீட்டுச் சடங்காக அன்றி, எதிர்காலம் குறித்த உரையாடலுக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என நம்பிக்கை கொள்கிறோம்.

வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்துவோர்:

 

– தினேஷ் – ஊடகவியலாளர் – ஜீ.ரி.வி.
 – சத்தியசீலன் –  தலைவர் தமிழ் மாணவர் பேரவை.

– பிரசாத் – அரசியல் விமர்சகர்

– தயானந்தா – ஊடகவியலாளர்

– இந்திரன் சின்னையா -மனித உரிமைச் செயற்பாட்டாளர்(நெதர்லாந்து)

– பாலன் -புதிய திசைகள்.

– சபா நாவலன் -பதிப்பாளர்கள் சார்பில்

– சஷீவன்  – நூலகம்

– பி.ஏ.காதர் – சமூக அரசியல் ஆய்வாளர்.

 

நூலாசிரியர் ஐயர் ஸ்கைப் இன் ஊடாகக் கலந்துகொள்வார்.

காலம்: 10:03:2012 (சனி)

நேரம் : மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை

இடம் : Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ (நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்)

(உரையாடலிலும் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொள்வோர் முன்கூட்டியே அறியத்தந்தால் இரவு உணவு ஒழுங்குபடுத்தலுக்கு வசதியானதாக அமையும்.)
தொடர்புகள் : inioru@gmail.com
அனைவரும் நட்புடன் அழைக்கப்படுகின்றனர்

தொடர்புடைய பதிவுகள் :

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (ஐயர்) : ஜூனியர் விகடன்

முன்பக்கம்

விருப்புப் பக்கமாக்க..

Exit mobile version