உலகமயப் போர்கள் தோற்றுவித்த நிலப்பிரபுத்துவம் சார்ந்த புதிய பணக்கார வர்க்கத்திற்கும் முன்னைய பணக்காரவர்கத்திற்கும் இடையிலான போட்டி பல இரத்தக் கீறல்களை உலகமயம் விழுங்கிய நாடுகள் பலவற்ற்கில் உருவாகின. இவ்வகையான முரண்பாடைப் பயன்படுத்திக்கொண்டு, ஜே.வி.பி, தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களின் துணையோடு அதிகாரத்தைக் கையகப்படுத்திய மகிந்த குடும்பம், புதிய பாசிச அரசியல் ஒழுங்கு ஒன்றை நிறுவ முற்பட்ட போது அது, அதிகார வர்க்க முரண்பாடுகள் இடையேயான நிழல் உலக யுத்தமாக மாறியது.
இந்த நிழல் உலக யுத்தத்தில் இந்திய உளவுத்துறையான ரோ (RAW) இன் காய் நகர்த்தல்கள் தெற்கு இலங்கையில் தீவிரமடைந்தது.
லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட போது அதுவரை இன அழிப்பின் கோரத்தைக் கண்டுகொள்ளாத மேல்தட்டுவர்க்கம் கொதித்தெழுந்து தெருக்களில் போராடி ஓய்ந்துபோனது.
பாசிச அதிகாரக்கட்டமைவு ஒராளவு முடிவிற்கு வந்தபின்னர், தரகு முதலாளித்துவ உள் முரண்பாடுகள் மீண்டும் கூர்மையடைகின்றன.
இலங்கையை ஊடகவியலாளரான உவிந்து குருகுலசூரிய பிரித்தானியவைத் தளமாகக் கொண்டு என்ற ஆங்கில இணையச் சஞ்சிகையை நடத்திவருபவர். லசந்த விக்கிரமதுங்க இன் நண்பர் என்று கூறும் உவிந்து அவருடன் நெருங்கிய தொடர்பாடலுக்கான பல சந்தர்ப்பங்களை கட்டுரை முழுவதும் கூறுகின்றார்.
உவிந்துவின் புலனாய்வு ஊடகவியலுக்கும் விக்கிலீக்ஸ் போன்ற அதிகாரவர்க்கத்தை நிர்வாணமாக்கிய ஊடகவியலுக்கும் தொடர்புகள் கிடையாது. எது எவ்வாறாயினும், உவிந்துவின் ஆக்கம் மேட்டுக்குடி அதிகார யுத்தத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
அவரது கட்டுரையின் பிரதான பகுதி:
“2010 ஆண்டின் இறுதியளவில் நான் லசந்தவின் இரண்டாவது மனைவியான சோனாலியுடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். அவரோடு நிகழ்ந்த உரையாடலின் விளைவாக லசந்தவின் கொலை நேரடியாக ஊடகத்துறையுடன் தொடர்புடையதா அன்றி மேலதிக காரணங்கள் உள்ளனவா என நான் சிந்திக்க ஆரம்பித்தேன். அந்தக் காலப்பகுதியில்தான் நான் சோனாலியும் நானும் இணைந்து Lanka Independent என்ற இணையத் தளத்தை ஆரம்பித்தோம்.
2011 ஜூன் முதலாவது வாரத்தில் பிரகீத் எக்னெலியகொட என்ற ஊடகவியலாளர் காணாமல் போனது குறித்து எனது தேடல்களை நான் எழுத ஆரம்பித்திருந்தேன். எனது கருதுகோளின் படி பிரகீத் எக்னலியகொட ஊடகவியல் தொடர்பாகக் கொல்லப்படவில்லை என்பதாகும். இதனை நான் சோனாலியுடன் பேசினேன். அனைத்து தரவுகளையும் அவர் கவனமாகக் கேட்டபின்னர் கூறியது:
“லசந்த கூட அவரின் ஊடக எழுத்துக்களுக்காகக் கொல்லப்படவில்லை”
ஏன்?, நான் கேட்கிறேன்
“உனக்குத் தெரியாது, அவரிடம் இருந்த திட்டம் அரசாங்கத்தை வீழ்த்துவது.., அவர் மேற்கொண்டிருந்த உளவு வேலைதான் கொலைக்குக் காரணம். அது ஊடகத் துறை அல்லவே” என்கிறார்.
ஏன்?, நான் கேட்கிறேன்
“லசந்த வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்றிற்கு வேலை செய்தார். பின்னதாக அதுபற்றி சொல்கிறேன்” என்று கூறினார்.
மேலே சொல்லப்பட்ட உரையாடலை மேற்கோள்காட்டி நான் சோனாலியும் நானும் பல மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர் மேலதிகமான எந்தத்தவலையும் பின்னர் தரவில்லை.
லசந்த கொலைசெய்யப்பட்ட பின்னர், லசந்த ரோ(RAW) என்ற இந்திய உளவுத்துறைக்கு வேலை செய்தார் என்பதை அறிந்துகொண்டேன். லசந்த கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக, அதிகாலை ஒரு மணியளவில் இந்தியத் தூத்ரகத்தோடு தொடர்புடைய குறித்த பெண் ஒருவரை சந்தித்தார். அப்போது இலங்கை உளவுத்துறை அவரைப் பின் தொடர்ந்தது. இதன் அடிப்படையில் லசந்தவின் கொலை உளவு வேலையுடன் தொடர்புடையது. நான் அதனை நம்பியிருக்கவில்லை. அது தான் சோனாலி குறித்துக்காட்டிய உளவுச் சேவையா? அது தெளிவில்லை.
ஆனால், சோனாலியை நம்பாமல் இருப்பதற்கு எனக்கு எந்தக் காரணமும் இல்லை. எனக்குத் தெரிந்தளவில் சோனாலி சுய நினைவோடு தான் காணப்பட்டர். அதன் பின்னர் கூட எமக்கிடையிலான மின்னஞ்சல் தொடர்புகளில் அவர் அதனை மறுதலிக்கவில்லை. அவர் லசந்தவின் நம்பிக்கைக்குரிய சக தொழிலாளராகவும், பின்னர் பெண்துணையாவும் பின்னர் மனைவியாகவும் இருந்து இறுதியில் விதவையானார். சட்டவல்லுனரும் ராஜதந்திரியும் ஆவர். யூஎன்பி அதிகாரத்திற்கு வந்ததும், ஊடகத்துறையைக் கைவிட்டு இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதரகத்தில் அவுஸ்திரேலியாவில் வேலை செய்தவர்.”
இந்தக் குற்றச்சாட்டை லசந்தவின் நல்ல நண்பரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், முதல் மனைவி ராணி ஆகியோரும் மறுத்துள்ளதாக உவிந்து தனது தொடரும் ஆக்கத்தில் குறிப்பிடுகிறார். அதிலும் முதல் மனைவி ராணி, லசந்த உளவாளியானால் குறிப்பிடத்தக்க சொத்துக்கள் எதுவுமற்று சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டிய தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
லசந்தவின் பின்னர் சண்டே லீடரின் ஆசிரியராகவிருந்த பெரடிக்கா ஜோன்ஸ் ஐ கேட்ட போது, அவர் கூறியது “மகிந்த ராஜபக்சவை லசந்த சந்தித்த அன்று இரவு, லசந்தவை இலங்கை உளவுத்துறையினர் பின் தொடர்ந்ததாகவும், அவர் வெளிநாட்டு உளவுத்துறையைச் சார்ந்த ஒருவரின் வீட்டிற்குள் சென்றதை அவர்கள் கண்டதாகவும் வதந்திகள் உலாவின, மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்களை வெளி நாட்டு உளவுத்துறை சார்ந்தவரிடம் அவர் வெளியிட்டதாகவும் அந்த வதந்திகள் மேலும் தெரிவித்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
அடிமட்ட மக்களோடு எந்தத் தொடர்புகளும் அற்ற சமூகத்தின் மேலணிகளின் அதிகார ஒழுங்குகளுக்கு இடையேயான முரண்பாடுகளின் அடிப்படையிலான ஊடகம் என்பது, புதிய பண்க்கார மாபியாக்களின் இன்னொரு உலகம்.
இவ உண்மையானால், இந்தியா திட்டமிட்ட இன அழிப்பை உள்ளூரில் தலைமைதாங்கிய ராஜப்கச குடும்பத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்த இந்தியா முற்பட்ட போது பலியானவர்களுள் ஒருவராக லசந்தவைக் கருதலாம்.
உவிந்துவின் முழுமையான கட்டுரை:
The Politics Of The Decision To Kill Lasantha – According To Wife It’s Not Related To Journalism
nn,sn