Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை-நடந்தது கொலை?

2016-ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஸ்வாதி என்ற பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை நடந்த சில மணி நேரங்களில் நடிகரும் பாஜக பிரமுகருமான ஓய்.ஜி. மகேந்திரன் பிலால் மாலிக் என்ற முஸ்லீம் திவீரவாதி பிரமாணப் பெண்ணை கொன்று விட்டதாக எழுத இந்தியா முழுக்க இந்த கொலை வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால், இந்தக் கொலைக்கு காரணமானவர் என்று சொல்லி திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறை சொன்னது.

ஒரு தலைக்காதலே இந்த கொலைக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் ராம்குமாருக்கும் ஸ்வாதிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும் ஸ்வாதி ராம்குமாரைப் பற்றி இழிவாகப் பேசியதால் இக்கொலை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், எது எப்படி இருந்தாலும் ஸ்வாதி கொல்லப்பட்டது தவறானது என்றே பெரும்பான்மையோர் கண்டித்தனர்.

இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வந்த நிலையில் மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. இப்போது அந்த விசாரணையில் ஆஜரான ராமகுமார் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அதில்,

 “நான் முன்பு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றிய போது ராம்குமார் என்ற நபரின் மூளை மற்றும் இதர உறுப்புகள் திசு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. நானும் இன்னொரு மருத்துவரும் பரிசோதனை செய்தோம்.

மூளைத் திசு பரிசோதனை செய்ததில் நல்ல நிலையில் இருந்தது. இதய திசுக்களை பரிசோதனை செய்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்தது. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேலுதடு, கீழுதடு, சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களை பரிசோதனை செய்து அறிக்கையில் அவை நல்ல நிலையில் இருந்ததாக சான்று வழங்கி இருக்கிறோம்” என உடற்கூராய்வு மருத்துவர் கூறியுள்ளார்.

ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக காவல்துறையினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை அவரது மரணம் மின்சாரத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் ராம்குமார் எப்படி கொல்லப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version