Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன்க்கு பரோல் கிடைக்குமா?

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி பேரறிவாளன் உட்பட எழுவர் வேலூர் சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர்.இதில் பேரறிவாளனுக்கு மட்டும்  தமிழ்நாடு அரசு தொடர்ந்து பரோல் வழங்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு பரோல் நீடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அதே வழக்கில் சிறையில் உள்ள நளினி உடபட பலருக்கும் பரோல் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகிறது.  இதே வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன்  2 மாதம் சாதாரண விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ரவிச்சந்திரனின் தாய் உடல் நலம் குன்றிய நிலையில் கடந்த ஜூன் மாதமே விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்காத நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த வழக்கு பாரதிதாசன், நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது  அந்த மனு மீது உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மனுதாரரின் மனு மீது தமிழக உள்துறை செயலாளர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு 6 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டார்கள்.

ஈழ அகதிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் தமிழ்நாடு அரசு ரவிச்சந்திரனின் பரோல் தொடர்பாகவும் முடிவெடுத்தால் அது வரவேற்கக் கூடி நடவடிக்கையாக இருக்கும்.

Exit mobile version