Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜீவ் காந்தி படுகொலை : கே.பி இடம் விசாரணை

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீ.பி.ஐ. அதிகாரிகளும், இந்திய புலனாய்வுப் பிரிவு முகவர்களும் அண்மையில் இலங்கைக்கு சென்று குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜீவ் கொலையுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலைத் திட்டம் தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சோனியா காந்தி சார்பானவர்கள் குமரன் பத்மநாதன் ஊடாக ரஜீவ் காந்தி கொலையை ஏற்பாடுசெய்ததாக வதந்திகள் உலாவின என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version